தளபதி விஜயின் அரசியல் வெற்றியைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன் – பவன் கல்யாணின் கலகல பேச்சு
Pawan Kalyan Talks About Thalapathy Vijay Victory | தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற நடிகர் தளபதி விஜய்க்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் தெலுங்கு சினிமாவில் நடிகரும் ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண் அவரைப் பார்த்து பொறாமை அடைவதாக கலகலப்பாக பேசி உள்ளார்.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் பவன் கல்யாண். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் பவன் கல்யாண் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி தற்போது ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண் வருடத்திற்கு ஒரு படமாகவது நடித்து வருகிறார். அரசியல் நடிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் பவன் கல்யாண் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றி நடிகர் விஜயின் அரசியல் வருகை மற்றும் அவரின் வெற்றி குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதன்படி தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்த நடிகர் தளபதி விஜய் தனது மக்களுக்கு நல்லது செய்ய அதிகாரம் வேண்டும் என்று தமிழக அரசியலில் களமிறங்கினார். தொடர்ந்து 2026-ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதல் தேர்தலிலேயே வெற்றிப் பெற்று தற்போது தமிழக முதலமைச்சராக வலம் வருகிறார். இவருக்கு பிரபலங்கள் மற்றும் மக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பவன் கல்யாண் சமீபத்தில் பேசியது வைரலாகி வருகின்றது.




எனக்குலாம் 15 வருசம் ஆச்சு… விஜயை பார்த்தார் பொறாமையாக உள்ளது:
அதன்படி அந்த நிகழ்ச்சியில் நடிகரும் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் பேசிய போது தளபதி விஜயின் அரசியல் வெற்றியைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன். அவர் வெறும் கட்-அவுட்கள் மற்றும் ஹாலோகிராம்களைக் கொண்டே வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், 15 ஆண்டுகால எனது போராட்டத்திற்குப் பிறகும், இத்தகைய பிரம்மாண்டமான வெற்றியை நான் இன்னும் பார்க்கவில்லை என்று கலகலப்பாக பேசியுள்ளார். பவன் கல்யாண் இதுகுறித்து பேசிய போது அங்கு அமர்ந்திருந்தவர்களிடையே சிரிப்பலை ஏற்பட்டது. இந்த நிலையில் கலகலப்பாக பவன் கல்யாண் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கே.எஸ்.ரவிக்குமாரின் அந்த படத்திற்கு இரண்டு க்ளைமேக்ஸ் – உங்களுக்கு தெரியுமா
இணையத்தில் வைரலாகும் பவன் கல்யாண் பேச்சு:
I’m jealous of #ThalapathyVijay’s political victory. He won with cutouts and holograms itself, yet despite 15 years of my struggle, I have not experienced a victory of this magnitude.
– #PawanKalyan pic.twitter.com/TSnbUojmOr— Movies Singapore (@MoviesSingapore) May 25, 2026
Also Read… சினிமாவில் 25 வருடங்களை கடந்த லிங்குசாமி… கொண்டாடிய பிரபல இயக்குநர்கள்