AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vijay Sethupathi: தமிழக அரசிற்கான ஓடிடி.. முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!

Vijay Sethupathi Urges CM Vijay: விஜய் சேதுபதி தொடர்ந்து சினிமாவில் கதாநாயகனாக நடித்தது அசத்திவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பரிமளா அண்ட் கோ பட ஆடியோ லாஞ்சில் கலந்துகொண்ட இவர் மேடையில் பேசுகையில், கமல்ஹாசனைபோல முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Vijay Sethupathi: தமிழக அரசிற்கான ஓடிடி.. முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!
முதல்வர் விஜய்க்கு விஜய் சேதுபதி கோரிக்கை Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 May 2026 13:36 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). கடந்த 2025ம் ஆண்டில் இயக்குநர் பாண்டிராஜ் (PandiRaj) இயக்கத்தில் வெளியாகியிருந்த இப்படமானது உலகமெங்கும் கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்தார். தற்போது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல் (Pocket novel) என்ற படத்தில், மாளவிகா மோகனனுடன் இணைந்து நடித்துவருகிறார். இந்நிலையில் அண்மையில் நடந்த பரிமளா அண்ட் கோ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி கலந்துகொண்டார்.

பின் அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய அவர், தமிழக முதல்வர் விஜய்க்கு (Tamil Nadu CM Vijay) சினிமாதுறையில் சார்பாக கமல்ஹாசன் (Kamal Haasan) வைத்த கோரிக்கையை மீண்டும் கேட்டுள்ளார். தற்போது இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. என்ன கோரிக்கைகள் வைத்துள்ளார் என விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: பெத்தி பட ஹெல்லல்லல்லோ வீடியோ பாடல்.. ராம் சரணுடன் சிறப்பு நடனத்தில் ஸ்ருதிஹாசன்!

தமிழக முதல்வர் விஜய்க்கு சினிமாதுறை சார்பாக விஜய் சேதுபதி வைத்த கோரிக்கை:

நிகழ்ச்சியின்மேடையில் விஜய் சேதுபதி பேசுகையில், “ஒரு முக்கியமான கோரிக்கை, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு விஜய் சார் அவர்களுக்கு, கமல்ஹாசன் சார் கேட்டுக்கொண்டதை போலவே, விரைவில் தமிழக அரசும் ஒரு ஓடிடி தளத்தை ஆரம்பித்தாள் மிகவும் நன்றாக இருக்கும் சார். திடீரென ஓடிடி மார்க்கெட் என ஒன்று வந்தது, அப்படியே மேலே ஏற்றிக்கொண்டு போனார்கள் தற்போது திடீரென விட்டுவிட்டார்கள்.

இதையும் படிங்க: டோக்கியோவில் இந்திய நடிகை.. சர்வதேச மேடையில் ராஷ்மிகாவிற்கு கிடைத்த அங்கீகாரம்!

இப்போது பிஸ்னஸ் எங்கே போகிறது என தெரியவில்லை. ரொம்பவே குழப்பமாக இருக்கிறது. அதனால தமிழகத்திற்க்கென ஒரு அரசு ஓடிடி இருந்தால் அது நன்றாக இருக்கும், இரண்டாவது திரையரங்குகள் டிக்கெட் விலை உயர்ந்து ரொம்ப நாள் ஆகிறது, தற்போது சினிமாவிலும் பட்ஜெட் அதிகமாகிவிட்டது. அப்படியே தியேட்டர் டிக்கெட் விலையையும் ஏற்றினால் நன்றாக இருக்கும்” என இரு கோரிக்கைகளை தமிழா முதல்வர் விஜய்க்கு, விஜய் சேதுபதி வைத்துள்ளார்.

முதல்வருக்கு கோரிக்கை வைத்து விஜய் சேதுபதி பேசிய வீடியோ பதிவு:

முதல்வரும், முன்னாள் நடிகருமான தளபதி விஜய்யுடன் விஜய் சேதுபதி மாஸ்டர் என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். இவறில் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் விஜய் முதல்வராக பதவியேற்றத்திற்கு த்ற்போதுவரைலும் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us