Rashmika Mandanna: டோக்கியோவில் இந்திய நடிகை.. சர்வதேச மேடையில் ராஷ்மிகாவிற்கு கிடைத்த அங்கீகாரம்!
Rashmika Mandanna In Tokyo: தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் முன்பிருந்தே அனிமே கார்டூன் மீது ஆர்வம் கொண்டிருந்தவர் என அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், டோக்கியோவில் நடைபெற்றிருந்த விழாவில், சிறந்த அனிமேஷனுக்கான விருதை ராஷ்மிகா வழங்கியுள்ளார்.
இந்திய சினிமாவின் நேஷனல் க்ரஷ் (National Crush) என ரசிகர்களால் அழைக்கப்பட்டுவருபவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை (Vijay Deverakonda) திருமணம் செய்திருந்த நிலையில், அதை தொடர்ந்து சினிமாவிலும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில், ராஷ்மிகா மந்தனா மிகப்பெரிய அனிமே ரசிகை என அனைவருக்கும் தெரியும். இவர் பல நேர்காணலில் அனிமேஷன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இவருக்கு சர்வதேச மேடையில் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்றிருந்த 10வது சர்வதேச அனிமே அவார்ட் (International Anime Award2026) நிகழ்ச்சியானது நடைபெற்றிருந்தது. இந்த விழாவில் இந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விருதை வழங்கியுள்ளார். தற்போது ஒரு இந்த நடிகைக்கு இவ்வளவு பெரிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் என்ற அங்கீகாரம் கிடைத்தது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது.




இதையும் படிங்க: கருப்பு படத்தில் துரை சிங்கம் என்ட்ரி.. ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி!
2026 அனிமே விருதுவழங்கும் விழாவில் ராஷ்மிக்கா மந்தனா:
நடிகை ராஷ்மிகா மந்தனா, சோனி நிறுவனத்தின் அனிமேஷன் ஸ்ட்ரீமிங் தளமான, கிரன்ச்சிரோல் என்ற தளமானது ஆண்டுதோறும் விருதுகளை வழங்கிவருகிறது. இந்நிலையில், 2026ம் ஆண்டில் 10வது சர்வதேச அனிமே விருதுகள் வழங்கும் விழா, நேற்று மே 23ம் தேதியில் டோக்கியோவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது.
இதையும் படிங்க: நீச்சலுடையில் தன்னை பற்றிய ஏ.ஐ புகைப்படங்கள்.. போலீசில் புகார் கொடுத்த ருக்மிணி வசந்த்!
இவ்விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா, இந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக பங்கேற்றிருந்தனர். அந்த நிகழ்ச்சி மேடையில், பிளாக் பாந்தர் பட நடிகர் வின்ஸ்டன் டியூக் உடன் இணைந்து சிறந்த அனிமேஷன் விருதை வணங்கினார். 2026ம் ஆனந்தின் சிறந்த கிண்ணிமே விருதை, சோலோ லெவலிங் சீசன் 2: அரைஸ் ஃ பிரம் தி ஷாடோவ் என்ற படமானது வென்றிருந்தது.
விருதுவழங்கும் விழாவில் இடம்பெற்றிருந்த ராஷ்மிகா மந்தனா குறித்த வீடியோ:
M’Baku and Srivalli in one frame at the #CrunchyrollAnimeAwards 2026!
Who would’ve imagined this epic crossover? 😱Our @iamRashmika sharing the stage with @Winston_Duke 🔥#RashmikaMandanna pic.twitter.com/nAH9ZIx3x6
— Rashmika Trends (@RashmikaTrends) May 23, 2026
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இந்தியில் காக்டைல் 2 படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இதில் ஷாஹித் கபூர், க்ரிதி சனோன் மற்றும் ராஷ்மிகா இணைந்து நடித்துள்ளனர். இதையடுத்து தெலுங்கில் இவர் மைசா, ரணபாலி போன்ற படங்களிலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.