Kamal Haasan: திரைத்துறை மேம்பாடு.. முதலமைச்சர் விஜய்க்கு 6 கோரிக்கை வைத்த கமல்ஹாசன் – வைரலாகும் பதிவு!
Kamal Haasans 6 Key Demands: கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்துவருபவர் கமல்ஹாசன். இவர் இன்று 2026 மே 16ம் தேதியில் முதலமைச்சர் விஜயை சந்தித்திருந்த நிலையில், திரையுலகம் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் சார்பாக 6 கோரிக்கைகளை வைத்துள்ளார். அது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் கமல்ஹாசன் (Kamal Haasan). இவர் கோலிவுட் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமில்லாமல், அரசியல்வாதியாகவும் இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவிலும் (Tamil Cinema) தொடர்ந்த திரைப்படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இன்று 2026 மே 16ம் தேதி காலையில் முன்னாள் நடிகரும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை (CM Joseph Vijay) நேரில் சந்தித்து வாழ்த்தியிருந்தார். மேலும் அவரிடம் திரைத்துறை மேம்பாட்டிற்காக கோரிக்கைகளையும் வைத்ததாக கூறியிருந்தார். அந்த வகையில், முதல்வர் விஜய்க்கு, கோரிக்கை வைத்து எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் முதல்வர் விஜய்யிடம் திரைத்துறையை மேம்படுத்த கோரி, 6 கோரிக்கைகளை வைத்துள்ளார். இந்த கோரிக்கைகளில், அரசுக்கு சொந்தமான ஓடிடி தளம், கேளிக்கை வரியை ஒழிக்கவேண்டும், பட திருட்டு தடுப்பிற்கு குழுவை அமையவேண்டும் என கிட்டத்தட்ட 6 கோரிக்கைகளை வைத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் கருப்பு.. பாராட்டி பதிவை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா மற்றும் விஷ்ணு விஷால்!
முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு:
My two requests: https://t.co/rP4bIo4Hzi pic.twitter.com/u6ywdmd5S1
— Kamal Haasan (@ikamalhaasan) May 16, 2026
முதல்வர் விஜய்க்கு நடிகர் கமல்ஹாசன் வைத்த கோரிக்கை:
1. தமிழக அரசின் CYTT தளத்தை தொடங்குதல்.
2. உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரியை ஒழித்தல்.
3. ஒரு வலுவான திருட்டுத் தடுப்புக் குழுவை அமைத்தல்.
4. ஒரு நாளைக்கு 5 காட்சிகளுக்கான அனுமதி.
5. கட்டாய 5 வார ஓடிடி வெளியீட்டுக் காலம்.
6. திரைப்படத் தயாரிப்பு ஊக்கத் திட்டம்.
இதையும் படிங்க: பெத்தி பட 3 நிமிட ட்ரெய்லர்.. முழுக்க அனல் பறக்கும் – அப்டேட் கொடுத்த சிரஞ்சீவி!
என மொத்தம் 6 கோரிக்கைகளை முதல்வர் விஜய்க்கு, நடிகர் கமல்ஹாசன் வைத்துள்ளார். அரசுக்கு சொந்தமான ஓடிடி தளம், கோளிகைக்கான வரியை ஒழிக்கவேண்டும், படம் லீக் மற்றும் திருட்டை தடுப்பதற்கான குழுவை அமைக்கவேண்டும், திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டுமே அனுமதிக்கவேண்டும், ஒரு படம் கட்டாயமாக ஓடிடிக்கு 5 வாரங்களுக்கு பிறகே வெளியிடவேண்டும் மற்றும் தமிழ்நாட்டின் திரைப்பட தயாரிப்பு மீட்டெடுப்பதோடு, வேலைவாய்ப்பை உருவாக்கி, மாநிலம் முழுவதும் சுற்றுலாவையும் மேம்படுத்தும் என மொத்தமாக 6 கோரிக்கைகளை வைத்துள்ளார். மேலும் தமிழக மக்களின் நன்மைக்காகவும், ரோபோ தொழில்நுட்பம் மூலம் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியை முற்றிலுமாக ஒழிப்பதற்கான மாநிலத் திட்டம் மற்றும் 12,525 கிராமப் பஞ்சாயத்துகள் முழுவதும் கிராம நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டம் போன்ற கோரிக்கைகளை கமல்ஹாசன் வைத்துள்ளார்.