Kamal Haasan: தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகள்.. முதல்வர் விஜயை நேரில் சந்தித்த நடிகர் கமல்ஹாசன்!
Kamal Haasan Meets CM Joseph Vijay: தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருந்துவருபவர் கமல்ஹாசன். இவர் இன்று 2026 மே 16ம் தேதியில், தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகராகவும், அரசியல்வாதியாகவும் அறியப்படுபவர் கமல்ஹாசன் (Kamal Haasan). இவரை ரசிகர்கள் அன்போடு உலகநாயகன் என அழைப்பது உண்டு. அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடிக்கவும், மற்ற நடிகர்களின் படங்களை தயாரித்தும் வருகிறார். இவரின் நடிப்பில் தக் லைஃப் (Thug Life) என்ற படமானது கடைசியாக வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக முழுமையாக அரசியலில் கவனம் செலுத்திவரும் நிலையில், இதையடுத்து ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பரீவ் (Anbariv) இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்காகிவில்லை.
அந்த வகையில் நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை (TN Chief Minister Joseph Vijay) நேரில் சென்று சந்தித்துள்ளார். அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமில்லாமல், திரைத்துறை வளர்ச்சிக்கான கோரிக்கைகளை வைத்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: பிச்சைக்காரன் படத்தையே இந்த நூறு சாமி மிஞ்சிவிடும் – விஜய் ஆண்டனி ஓபன் டாக்
தமிழக முதல்வர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்தது குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச்… pic.twitter.com/timwTZeEdY
— Kamal Haasan (@ikamalhaasan) May 16, 2026
இந்த பதிவில் கமல்ஹாசன், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் தம்பி விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து, வலதுகாலை தெரிவித்தேன், தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் என்னிடம் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன், நன்மை மலரட்டும்” என அந்த பதிவில் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: தனுஷ் படத்திற்கு முன்னதாக வேறு படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்
தமிழக முதல்வர் ஜோசப் விஜயை சந்தித்து பல்வேறு நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். சமீபத்தில் நடிகர்கள் சங்கத்தின் தலைவர்களான கார்த்தி, நாசர் மற்றும் கருணாஸ் போன்றோர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்தியிருந்தனர். அந்த வகையில், இன்று 2026 மே 16ம் தேதியில் நடிகர் கமல்ஹாசனும், அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.