மேற்கு ஆசியாவில் நிலவும் தொடர் நெருக்கடி… திரைத்துறையினருக்கு கமல் ஹாசன் விடுத்த கோரிக்கை – வைரலாகும் எக்ஸ் பதிவு
Kamal Haasan X Post Viral On Social Media: நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் கமல் ஹாசன். இவர் தற்போது திரைத்துறையினருக்கு விடுத்த வேண்டுகோள் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி உலக சினிமா ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்தவர் நடிகர் கமல் ஹாசன். இவர் உலக அளவில் சினிமாவில் உள்ள பல தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு அதனைத் தமிழ் சினிமாவில் கொண்டு வந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். இதன் காரணமாகவே இவரை ரசிகர்கள் உலக நாயகன் என்று அன்புடன் அழைக்கின்றனர். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் ஹாசன் பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பலப் படங்களில் நடித்து உள்ளார். 250க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்த நடிகர் கமல் ஹாசன் சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார்.
தொடர்ந்து பலப் படங்களில் நாயகனாக நடித்த கமல் ஹாசன் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்தும் தனது இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் பணியாற்றி வருகிறார். மேலும் இவரது நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் திரைத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு பதிவு ஒன்றை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.




திரைத்துறையினருக்கு கமல் ஹாசன் விடுத்த கோரிக்கை:
அந்த பதிவில் நடிகர் கமல் ஹாசன் கூறியதாவது, மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் நெருக்கடி மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, திரைப்பட துறையில் படத்தை தயாரிப்பதில் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் படப்பிடிப்புகளை அதிக நாட்களுக்கு இழுத்துச் செல்லாமல் அட்டவணையை சுருக்கி குறைவான நாட்களில் படங்களை எடுத்து முடிப்பது மற்றும் தேவையற்ற வெளிநாட்டு படப்பிடிப்புகளை தவிர்க்க வேண்டு என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அந்தப் பதிவில் கமல் ஹாசன் கூறியதாவது, சினிமாவில் பொருளாதாரத்தை பாதுகாப்பது என்பது ஒட்டுமொத்த திரையுலகையும் அதனைச் சார்ந்தவர்களையும் பாதுகாப்பது என்றும், இப்படியான பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க திரைத்துரையில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… கருப்பு படத்தின் ரிலீஸ் சிக்கல்… போராட்டத்தில் குதித்த சூர்யா ரசிகர்கள்
நடிகர் கமல் ஹாசன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
My appeal to our Industry.@ficci_india @producers_guild @tfpcin @TFPCOffl @kfpaofficial @TFCCofficial @imppa_official @federation_film @fwicemum @aifecsocial @aicwaofficial @tfapatn #SouthIndianFilmChamberOfCommerce #NorthernIndiaMotionPicturesAssociation… pic.twitter.com/24WXgYlbHN
— Kamal Haasan (@ikamalhaasan) May 15, 2026
Also Read… ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிளாஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு