Suriya: ஹீரோவாக அந்த தகுதி நிச்சயம் இருக்கணும்.. ஆனால் அது இருக்கவே கூடாது – சூர்யா ஓபன் டாக்!
Suriya About Hero Qualifications in cinema: நடிகர், தயாரிப்பாளருமாக தென்னிந்திய சினிமாவில் இருந்துவருபவர் சூர்யா. இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் ஒருவர் நடிகரவேண்டும் என்றால் என்ன தகுதிகள் இருக்கவேண்டும் மற்றும் அவரின் திறமை எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகர் சூர்யா (Suriya) கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கதாநாயகனாக படங்களில் நடித்துவருகிறார். இவர் தற்போது தயாரிப்பாளராகவும் தனது மற்றும் மற்ற நடிகர்களின் படங்களை தயாரிக்கவும் தொடங்கிவிட்டார். சினிமாவில் இயக்குநர் வசந்த் (Vasanth) இயக்கத்தில் கடந்த 1997ம் ஆண்டில் வெளியான நேருக்கு நேர் (Nerukku Ner) என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் முதல்வரும், முன்னாள் நடிகருமான தளபதி விஜய்யுடன் (CM Thalapathy VIjay) இணைந்து நடித்திருந்தார். இப்படத்தின் மூலமாகவே இவர்கள் இருவரின் நட்பும் தொடர்ந்தது என்று கூறலாம். இந்நிலையில் சூர்யா தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்துவந்த நிலையில், தெலுங்கு மற்றும் மலையாள இயக்குநர்கள் இயக்கும் படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.
இவரின் நடிப்பில் திரையரங்குகளில் இறுதியாக கருப்பு என்ற படமானது வெளியாகியிருந்தது. அந்த வகையில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த சூர்யா, சினிமாவில் ஹீரோவாகுவதற்கு என்ன தகுதி இருக்கவேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: டார்க் காமெடி பாணியில் ஓடிடியில் வெளியான இந்த மோகினியாட்டம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
நடிகர் சூர்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
ஹீரோவாகுவதற்கு என்ன தகுதி வேண்டும் என்பது குறித்து சூர்யா சொன்ன விஷயம்:
அந்த நேர்காணலில் சூர்யா பேசுகையில், “முதலில் அவர்களுக்கே அவர்களை பிடிக்கவேண்டும். முதலில் அவருக்கே அவரை பிடித்தால்தான், மற்றவர்களுக்கும் அவரை பிடிக்கும். தன்மீது பயம், மற்றவர்கள் மீது பயம், நம்மை நமக்கே பிடிக்காமல் இருக்கும் அதெல்லாம் இருக்கக்கூடாது. மற்றவர்களுக்கும் நம்மை புடிக்காமல் போய்விடும். இதை நான் எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன். நடிக்க வரவில்லை, நடனமாட வரவில்லை, ரோமன்ஸ் பண்ண வரவில்லை என நமக்கே நம் மீது சந்தேகம் இருக்க கூடாது.
இதையும் படிங்க: கருப்பு திரைப்பட கிளைமேக்ஸ் காட்சி… திரையரங்கில் சாமி வந்து ஆடிய ரசிகர் – வைரலாகும் வீடியோ!
முதலில் எல்லாம் நமக்கு வரும் என நாம் நினைக்கவேண்டும். நான் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து எனக்கு எல்லாம் வரும் என பாசிட்டிவாக நினைக்க தொடங்கினேன். எல்லாமே நம்மால் முடியும் என நம்பனும், எனது தொழில் மட்டுமில்லை, எல்லா துறையிலும் அப்படித்தான். எனக்கு சேலஞ் பண்ண பிடிக்கும், என்னால் முடிந்த விஷயம் மட்டும் பண்ணாமல், என்னால் முடியாத விஷயங்களையும் பண்ணவேண்டும் என நினைப்பேன்” என அதில் அவர் ஓபனாக பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.