டார்க் காமெடி பாணியில் ஓடிடியில் வெளியான இந்த மோகினியாட்டம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Bharathanatyam 2 Mohiniyattam Movie OTT Review Here: மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் பரதநாட்டியம் 2 மோகினியாட்டம். இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம்.
மலையாள சினிமாவைப் பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளாக எந்த ஜானரில் படம் வெளியானாலும் அந்தப் படம் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பரதநாட்டியம் 2 மோகினியாட்டம். டார்க் காமெடி பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் கிருஷ்ணதாஸ் முரளி எழுதி இயக்கி இருந்தார். கடந்த 2024-ம் ஆண்டு வெளியான பரதநாட்டியம் என்ற படத்தின் இரண்டாம் பாகமாக இந்த பரதநாட்டியம் 2 மோகினியாட்டம் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர்கள் சைஜு குருப், கலாரஞ்சினி, சுராஜ் வெஞ்சாரமூடு, ஜெகதீஷ், வினய் கோட்டை, குழந்தை ஜீன், ஸ்ரீஜா ரவி, அபிராம் ராதாகிருஷ்ணன், விஜய் பாபு, திவ்யா எம். நாயர், ஸ்ருதி சுரேஷ், நந்து பொடுவால், ஜினில் ரெக்ஸ், ஜிவின் ரெக்ஸ், சுவாதிதாஸ் பிரபு, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, சந்தோஷ் கே. நாயர், நிஸ்தர் சைட், ஸ்ரீரேகா ராஜகோபால், சலீம் ஹாசன், சாய்குமார், ஜிஸ் ஜாய் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
பரதநாட்டியம் 2 மோகினியாட்டம் படத்தின் கதை என்ன?
பரதன் என்பவர் உயிரிழந்ததில் இருந்து இந்த படத்தின் கதை தொடங்குகிறது. இவருக்கு இரண்டு குடும்பங்கள் இருக்கிறது. இது பரதன் உயிரிழக்கும் போது தான் இரண்டு குடும்பங்களுக்கும் தெரியும். இதில் மூத்த மனைவியின் மகன் சசி இரண்டு குடும்பத்தையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார். இரண்டு குடும்பமும் இணைந்து நன்றாக இருக்கும் போது கோவிந்தராஜ் என்பவர் மூலம் ஒரு புதிய பிரச்சனை கிளம்புகிறது.




Also Read… கருப்பு படத்தின் 9 மணி சிறப்பு காட்சி ரத்தாக என்ன காரணம்? தயாரிப்பாளர் சொன்ன விசயம்
அந்த பிரச்சனையை சரி செய்ய இரண்டு குடும்பங்களும் முயற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக கோவிந்தராஜை கொலை செய்துவிடுகின்றனர். இந்த கொலையை மறைக்க அந்தக் குடும்பம் என்ன எல்லாம் செய்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஜன நாயகன் படக்குழுவிற்கு விஜய் வைத்த கோரிக்கை – வைரலாகும் தகவல்