AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜாலியா நீ வாடி இது பிரைவேட் பார்ட்டி தான் – 4 ஆண்டுகளைக் கடந்தது சிவகார்த்திகேயனின் டான் படம்!

4 Years Of Don Movie | நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் டான். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜாலியா நீ வாடி இது பிரைவேட் பார்ட்டி தான் – 4 ஆண்டுகளைக் கடந்தது சிவகார்த்திகேயனின் டான் படம்!
டான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 May 2026 19:59 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் டான். இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக அவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சமுத்திரக்கனி, ஆதிரா பாண்டிலட்சுமி, கஜராஜ், எஸ்.ஜே. சூர்யா, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி கிருஷ்ணகுமார், சிங்கம்புலி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராஜு ஜெயமோகன், ஷாரிக் ஹாசன், ஸ்வேதா வெங்கட், ராதா ரவி, மனோபாலா, ஜார்ஜ் மரியன், ராதா ரவி, மனோபாலா, ஜார்ஜ் மரியன், மகேஸ்வரி காவிதாவ், மகேஸ்வரி சத்தம் சிபி சக்கரவர்த்தி, நாகூரான் ராமச்சந்திரன் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியகாவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

4 ஆண்டுகளைக் கடந்தது சிவகார்த்திகேயனின் டான் படம்:

சிவகார்த்தியேகன் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே அவரது அப்பா சமுத்திகணி அவரை எப்படியாவது நன்கு படிக்க வைத்து ஒரு இன்ஜினியர் ஆக்க வேண்டும் என்பது கனவாக வைத்துள்ளார். படிப்பில் சுத்தமாக ஆர்வம்  இல்லாத சிவகார்த்திகேயன் கல்லூரியில் தேர்வில் ஃபெயில் ஆகிவிட்டு தனது தந்தையிடம் பொய் கூறுவார்.

இதற்கு இடையில் சிவகார்த்திகேயனுக்கு காதல் வேறு ஏற்படுகின்றது. தந்தையிடம் ஒரு பக்கம் பொய் மறுபக்கம் படிப்பும் வரவில்லை இதில் காதல் வேற இப்படி இருக்கும் ஒரு இளைஞர் எப்படி வாழ்க்கையில் முன்னேறினார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… Sivakarthikeyan: வேலும் மயிலும்.. புது இன்டீ பாடலை தயாரித்திருக்கும் சிவகார்த்திகேயன் – ப்ரோமோ வீடியோ இதோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதித்த தமிழ் நாடு அரசு – முதலமைச்சர் விஜய்க்கு நன்றி கூறிய படக்குழு

Follow Us