ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் இல்லையாம்… எப்போது தெரியுமா?
Rajinikanths Jailer 2 Movie Release Update | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் உள்ள ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். 75 வயதைத் கடந்தாலும் தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படம் என்ற விகித்திலாவது படம் ரிலீஸ் ஆவதை உறுதி செய்து வருகிறார். சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி 50 வருடங்களைக் கடந்த ரஜினிகாந்த் இளம் தலைமுறையினருக்கு போட்டியாக தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கூலி படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் உடன் கூட்டணி வைத்தார். இவர்களின் கூட்டணி இரண்டாவது முறையாக நடந்தது. முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து ஜெயிலர் படத்தில் பணியாற்றினர். அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் கூட்டணி அமைத்தனர்.
தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது. மேலும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறு விறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




கிருஷ்ண ஜெயந்தியை குறி வைக்கும் ஜெயிலர் 2 படக்குழு:
ஒரு மிகச்சிறந்த தொடர்ச்சியை வழங்குவதற்காக, இயக்குனர் நெல்சனுக்குப் போஸ்ட் புரடெக்ஷன் பணிகளுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதால், ஜெயிலர் 2 திரைப்படம் தற்போது செப்டம்பர் 4, 2026 அன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 2026-இல் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது; அதேவேளையில், சூரி நடிக்கும் பிரம்மாண்டமான பொழுதுபோக்குத் திரைப்படமான மண்டாட்டி என்பதும் ஆகஸ்ட் 2026-இல் வெளியாகவுள்ளது. இப்படத்தின் உலகளாவிய வெளியீட்டுப் பணிகளை ஆர்.எஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட் நிறுவனம் முழுமையாகக் கையாள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… கருப்பு படத்தை சூர்யா அண்ணாவால் மட்டுமே பண்ணமுடியும் – நடிகர் கார்த்தி புகழாரம்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
BUZZ – #Jailer2 is now planned to be released on September 4th, 2026 (Krishna Jayanthi), as director #Nelson requires more time for post-production work to deliver a perfect sequel 👌.#Suriya’s #VishwanathAndSons is now planned for a theatrical release in August 2026, while… pic.twitter.com/DUmMHmmt1W
— Movies Singapore (@MoviesSingapore) May 12, 2026
Also Read… Director Bala: மமிதாவை நான் அடிச்சேனா.. அவர் எனது மகள் மாதிரி.. உண்மையை சொன்ன இயக்குநர் பாலா!