விஜய் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு சென்ற ரஜினிகாந்த்
Rajinikanth Avoids Question About Chief Minister Thalapathy Vijay: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்திற்கு சென்ற போது அங்கு விஜய் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காமல் சென்ற வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா மட்டும் இன்றி ஒட்டுமொத்த பான் இந்திய மொழிகளிலும் திரையில் நடிகர்களாக மக்களிடையே வரவேற்பைப் பெறுபவர்கள் தொடர்ந்து அரசியலில் களம் இறங்குவது வழக்கமாகவே உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் தொடங்கி தற்போது முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள நடிகர் தளபதி விஜய் வரை பலர் அரசியலில் களம் இறங்கி உள்ளனர். இந்த வரிசையில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி கடந்த 2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். ஆனால் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக கட்சி தொடங்குவதாக சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் கட்சி எதுவும் தொடங்கவில்லை என்று இறுதியில் கூறிவிட்டார்.
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் தளபதி விஜய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சியின் சார்பில் நடந்து முடிந்த 2026-ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் தளபதி விஜய் போட்டியிட்டார். அதில் 108 தொகுதிகளில் வெற்றிப்பெற்று பெரும்பான்மையைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து சில கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளார்.




விஜய் குறித்த கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு சென்ற ரஜினிகாந்த்:
இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு தளபதி விஜய் பதவி ஏற்றப் பிறகு பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் நேற்று 11-ம் தேதி சட்டமன்ற கூட்டத்திற்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, பாமாக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாதக தலைவர் சீமான் ஆகியோரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு அதிக அளவில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
இது மட்டும் இன்றி முதலமைச்சராக பதவி ஏற்ற உடனே சில முக்கிய கோப்புகளில் கையெழுத்து இட்டு மாஸ் காட்டினார். இப்படி இருக்கும் சூழலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு எந்த பதிலும் பேசாமல் சிரித்தபடி கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றார் ரஜினிகாந்த். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ:
#REPORTER : விஜய் அவர்கள்முதல்வராக பொறுப்பேற்று உள்ளார் ?@rajinikanth : 🙏 pic.twitter.com/qelrgsG1zF
— Prakash Vijay (@PrakazVijay_Of) May 12, 2026
Also Read… பெத்தி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு