அனுபமா பரமேஸ்வரனுக்கு மட்டும் ஏன் இப்படியான கதையா அமையுது? ஓடிடியில் வெளியாகி உள்ள லாக்டவுன் படத்தின் விமர்சனம் இதோ
Anupama Parameswarans Lockdown OTT Review: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுபமா பரமேசுவரன். இவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான லாக்டவுன் படம் தற்போது ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. இந்த நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான பிரேமம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை அனுபமா பரமேசுவரன். இவர் இந்தப் படத்தில் பள்ளியில் படிக்கும் மாணவியாக நடித்து இருந்தார். மேலும் இவரது நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை அனுபமா பரமேசுவரன் தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் அதிக அளவில் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிகை அனுபமா பரமேசுவரன் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நடிகை அனுபமா பரமேசுவரன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லாக்டவுன்.
இந்த் லாக் டவுன் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகை அனுபமா பரமேசுவரன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இதில் நடிகை அனுபமா பரமேசுவரனுக்கு அப்பாவாக நடிகர் சார்லியும் அம்மாவாக நடிகை நிரோஷாவும் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி, விநாயக் ராஜ், விது, அபிராமி, ரேவதி, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
அனுபமா பரமேசுவரனின் லாக்டவுன் படத்தின் கதை என்ன?
நடிகை அனுபமா பரமேசுவரன் டிகிரி முடித்துவிட்டு இரண்டு ஆண்டுகளாக வேலை தேடிக்கொண்டு இருக்கிறார். நைட் ஷிஃப்ட் வேலை கிடைத்தால் அதற்கு போகக்கூடாது என்று அவரது அப்பா சார்லி கூறி வருவதாலேயே இவருக்கு வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது. இப்படி இருக்கு நிலையில் தோழி ஒருவரிடம் வேலை கேட்டும் போது அவர் மாலை வீட்டிற்கு அழைக்கிறார்.




அப்படி அவரைப் பார்க்க சென்ற இடத்தில் தோழி அனுபமாவே பார்ட்டி ஒன்றிற்கு அழைத்து சென்று நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அங்கு பார்ட்டியில் ஜாலியாக இருப்பதற்காக தனது அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு பார்ட்டியில் குடிக்கிறார். பிறகு ஜாலியாக நடனமாடி மட்டையாகிறார்.
Also Read… விஜய் தேரவரகொண்டா பர்த்டே ஸ்பெஷல்… புதிய போஸ்டரை வெளியிட்ட ரௌடி ஜனார்தனா படக்குழு
இந்த நிகழ்விற்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து வேலையும் கிடைக்கிறது. அப்போது தான் அனுபமாவிற்கு தான் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது. அவர் எப்படி கர்ப்பமாக ஆனார் என்பதே புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த பார்ட்டியில் இவர் மட்டயான போதே அவரை யாரோ பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அது யார் என்று தேடி கண்டுபிடிக்கும் வேலையை விட்டுவிட்டு கருவை கலைக்க போராடுகிறார் அனுபமா பரமேசுவரன், அப்படி இருக்கும் போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்படுகின்றது. இப்படி ஒரு சூழலில் அவர் அந்த கருவை அழித்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… கருப்பு படத்தின் வெளியீட்டு உரிமையை தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்