AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு படத்தின் வெளியீட்டு உரிமையை தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்

Karuppu movie Tamil Nadu theatrical rights update: நடிகர் சூர்யா நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தை தமிழ்நாட்டில் எந்த நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

கருப்பு படத்தின் வெளியீட்டு உரிமையை தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 May 2026 13:14 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இறுதியாக நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான ரெட்ரோ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படம் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்தப் படம் 45-வதாக உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து உள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் உருவான பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருப்பு பட வெளியீட்டு உரிமையை தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்:

மேலும் படம் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் வெளியீடு உரிமைகள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தமிழ் நாட்டில் வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்ட்ரி நிறுவனம் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சந்தானத்தின் புதுப் படத்தின் டைட்டில் லவ் பைட் – தயாரிப்பாளர் வெளியிட்ட அப்டேட்

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி… எச்சரிக்கை கொடுத்த சிவகார்த்திகேயன்!

Follow Us