RJ Balaji: கருப்பு பட ட்ரெய்லர் ரெடி.. ஆனால் அரசியல் குழம்பங்கள் பெரிதாக இருக்கிறது – திடீரென வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி!
RJ Balajis Karuppu Trailer Update: பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தை இயக்கியிருக்கும் நிலையில், இப்படமானது மே 14ம் தேதியில் வெளியாகிறது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதுகுறித்த வீடியோ ஒன்றை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் கருப்பு (Karuppu). இதில் நடிகர் சூர்யா (Suriya) ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில், அவருடன் ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இந்த கருப்பு படமானது கடந்த 2024ம் ஆண்டு முதல் தயாராகிவந்த நிலையில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன், தெய்வீகம், காமெடி, பேமிலி பொழுதுபோக்கு என ரசிகர்களை கவரும் வகையில், இப்படமானது உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைக்க, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு படத்தை தயாரித்துள்ளார். இப்படம் கிட்டத்தட்ட ரூ 150 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் தயாராகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த கருப்பு படமானது வரும் 2026ம் ஆண்டு மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ள்ளது.
அந்த வகையில் இதன் வெளியீட்டிற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் கருப்பு பட ட்ரெய்லர் குறித்தும், தற்போது இருக்கும் அரசியல் குழப்பங்கள் குறித்தும் பேசிய, இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகை ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
கருப்பு பட ட்ரெய்லர் குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட திடீர் வீடியோ:
View this post on Instagram
அந்த வீடியோவில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, “கருப்பு படத்தின் ட்ரெய்லர் சூப்பராக ரெடியாகிவிட்டதாகவும், ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையால், கருப்பு பட ட்ரெய்லர் இது மங்கிவிட நாங்கள் விரும்பவில்லை. விரைவில் தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன். அதுவரை காத்திருப்போம்.. அதன் பிறகு, உங்களுக்கு டிரெய்லரும் ‘வெரப்பா எக்ஸ்டெண்டட் பாடலும் வெளியாகும், மேலும் அதிலிருந்து கருப்பு படமும் வெளியாகும் என நம்புறேன். கருப்பன் கூட இருக்கான், கூட வருவான் நல்லதே நடக்கும்” என அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: பர்த்டே பாய் சந்தீப் கிஷனுக்கு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய சிக்மா படக்குழு!
கருப்பு படத்தின் ட்ரெய்லர் மற்றும் படத்தின் ரிலீஸில் சிக்கலா?
தற்போது தமிழகத்தில் அரசியல் மற்றும் யார் ஆட்சியமைக்கிறார் என்பது குறித்த குழப்பங்கள் இருக்கிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட குழப்பங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டுவரும் நிலையில், இந்த சமயத்தில் கருப்பு திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யவேண்டாம் என படக்குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி, இந்த அரசியல் குழப்பங்களுக்கு பிறகே கருப்பு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்றும், இந்த குழப்பம் இன்னும் நீடித்தால் கருப்பு பட ரிலீஸுக்கு தள்ளிப்போக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
கருப்பு திரைப்படத்தின் புதிய போஸ்டர் குறித்த எக்ஸ் பதிவு:
#KaruppuTrailer soon 🔥#Karuppu in theatres worldwide from 14th May 2026.
A @SaiAbhyankkar Musical 🎶 @Suriya_offl @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr #Indrans @natty_nataraj #Swasika #SupreethReddy #AnaghaMayaRavi #VikramMor @kalaivananoffl #ArunVenjaramoodu pic.twitter.com/Y9ylSEEhDv
— Karuppu (@KaruppuMoviee) May 7, 2026



