AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya: கோவையில் குலதெய்வ கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா!

Suriya Temple Visit: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவர் இன்று 2026 மே 7ம் தேதியில், தனது பூர்வீக ஊரான கோவையில் உள்ள லைக்கேபாளையத்தில் உள்ள தனது குலதெய்வ கோவிலில் சிறப்பாக சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

Suriya: கோவையில் குலதெய்வ கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா!
நடிகர் சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 May 2026 15:11 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் முதல் திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இதில் சூர்யா ஆக்ஷன் மற்றும் தெய்வீகமான வேடங்களில் நடித்துள்ளார். இந்த படமானது கருப்பசாமியின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இதை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. இப்படத்தில் சூர்யா லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இந்த ஜோடியானது பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யா மற்றும் திரிஷா இருவருமே வழக்கறிஞராகவே நடித்துள்ளனர். அந்த விதத்தில் படத்தின் மீதான எதிரார்ப்பு அதிகரிக்கிறது.

அந்த வகையில் இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், நடிகர் சூர்யா தொடர்ந்து பல்வேறு கோவில்களில் சுவாமி தரிசனம் செய்துவருகிறார். அந்த வகையில் இன்று 2026 மே 7ம் தேதியில், கோவையில் (Coimbatore) உள்ள லைக்கேபாளையம் என்ற பகுதியில் இருக்கும், தனது குலதெய்வமான மதுர காளியம்மனை சூர்யா தரிசித்துள்ளார். மேலும் தரிசனத்திற்கு பிறகு ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகர் மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட சிக்கல் – என்ன ஆச்சு தெரியுமா?

கருப்பு திரைப்படம் குறித்து சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சூர்யாவின் கருப்பு திரைப்படமானது வரும் 2026 மே 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. இதில் சூர்யா, திரிஷாவுடன் ஆர்.ஜே.பாலாஜி, ஷிவதா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், நட்டி நடராஜ், யோகி பாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது ஒரு பிக் ஸ்டார் திரைப்படமாக, பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது.

இதையும் படிங்க: அதர்வாவின் பிறந்த நாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடும் இதயம் முரளி படக்குழு

இந்த படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழ் கொடுத்திருக்கும் நிலையில், இதை 13 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் திரையரங்குகளில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்னும் இப்படத்தின் வெளியீட்டிற்கு வெறும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சூர்யாவிற்கு வெற்றி படமாக இது அமையும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us