AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடிகர் மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட சிக்கல் – என்ன ஆச்சு தெரியுமா?

Trouble at the shoot of Varanasi film: தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் உருவாகி வரும் வாரணாசி படத்தில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட சிக்கல் – என்ன ஆச்சு தெரியுமா?
மகேஷ் பாபுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 May 2026 11:52 AM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் தற்போது மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் வாரணாசி. இந்த வாரணாசி படத்தை பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி எழுதி இயக்கி வருகிறார். தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபல இயக்குநராக எஸ்.எஸ்.ராஜமௌலி வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இவர் தெலுங்கு சினிமாவை உலக அளவில் பிரபலமாக்கியதில் பெரிய பங்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் மகேஷ் பாபு மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி இருவரும் வாரணாசி படத்தில் இணைந்துள்ளனர். மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் படம் வருகின்ற 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தப் படத்தில் பல பிரபலங்கள் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட சிக்கல்:

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் வாரணாசி படத்தின் படப்பிடிப்பில் ஒரு அண்டர் வாட்டர் காட்சி எடுக்க வேண்டும் என்றும் அந்த காட்சியை எடுப்பதற்காக சுமார் 150 வாட்டர் டேங்கர் லாரியில் தண்ணீர் வேண்டும் என்று ஐதரபாத் குடிநீர் வாரியத்திடம் படக்குழு கோரிக்கை வைத்து இருந்தது.

Also Read… தேர்தல் முடிவுக்கு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

ஆனால் தற்போது கோடை காலத்தில் நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் 150 லாரிகளில் தண்ணீரை கொடுக்க முடியாது என்று குடிநீர் வாரியம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக படத்தின் படப்பிடிப்பு பணிகள் தாமதமாக வாய்ப்பு உள்ளது என்றும் இதனால் படம் குறிப்பிட்ட நேரத்தில் முடிவடையாமல் போகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தற்போது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன் – தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன இயக்குநர் சேரன்

Follow Us