மம்முக்கா – லால்லேட்டன்… தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன மோலிவுட் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
Malayalam celebrities congratulates Thalapathy Vijay | 2026-ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் விஜய் பெருமான்மையுடன் வெற்றிப்பெற்றுள்ளார். அவருக்கு மலையாள திரையுலகில் யார் எல்லாம் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள் என்பதை தற்போது இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்த நடிகர் தளபதி விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வெற்றியும் பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வரும் போது இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளனரோ அதே அளவிற்கு கேரளாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா ரசிகர்கள் விஜய் படங்களை எந்த அளவிற்கு கொண்டாடுவார்களோ அதே அளவிற்கு கேரளாவிலும் ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம். இப்படி இருக்கும் நிலையில் தளபதி விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.
இதற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மலையாள சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தளபதி விஜய்க்கு தெரிவித்து உள்ளனர். அது தற்போது வைரலாகி வருகின்றது.




தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன மோலிவுட் பிரபலங்கள்:
Heartfelt congratulations to @TVKVijayHQ on this remarkable victory. Wishing you strength and vision as you step forward to lead the state
— Mammootty (@mammukka) May 4, 2026
நடிகர் மம்முட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, இந்தச் சிறப்பான வெற்றிக்கு விஜய்க்கு என் உளமார்ந்த வாழ்த்துகள். மாநிலத்தை வழிநடத்த நீங்கள் முன்னெடுத்துச் செல்லும் வேளையில், உங்களுக்கு வலிமையும் தொலைநோக்குப் பார்வையும் அமைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன மோலிவுட் பிரபலங்கள்:
Congratulations, dear Vijay, on this wonderful victory. The people have chosen you; their trust is a true honour. I am sure you will wear it with pride and purpose as you embark on this new journey of service. My best wishes to you and your team. @TVKVijayHQ
— Mohanlal (@Mohanlal) May 4, 2026
நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, அன்பு விஜய், இந்த அற்புதமான வெற்றிக்கு என் வாழ்த்துகள். மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்; அவர்களின் நம்பிக்கை ஒரு உண்மையான கௌரவமாகும். சேவைக்கான இந்தப் புதிய பயணத்தை நீங்கள் தொடங்கும்போது, இந்தக் கௌரவத்தை மிகுந்த பெருமையுடனும் உறுதியுடனும் நீங்கள் ஏற்றுச் சுமப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் என் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… டியூட் பட இயக்குநருடன் இணைந்த சிலம்பரசன்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?
தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன மோலிவுட் பிரபலங்கள்:
Huge congrats to @actorvijay Anna on this generational win ! This is truly historic ! Clinching it in cinematic style. @TVKVijayHQ
— Dulquer Salmaan (@dulQuer) May 4, 2026
இந்தத் தலைமுறைச் சிறப்புமிக்க வெற்றிக்கு, நடிகர் விஜய் அண்ணாவுக்குப் பெரும் வாழ்த்துகள்! இது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இதை அவர் ஒரு திரைப்பட பாணியிலேயே கைப்பற்றியிருக்கிறார் என்று நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
Also Read… Venkat Prabhu: முன்னிலையில் விஜய்யின் தவெக.. இயக்குநர் வெங்கட் பிரபு போட்ட பதிவு!
தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன மோலிவுட் பிரபலங்கள்:
The historical example of luck favours the brave !@actorvijay sir #respect #change pic.twitter.com/xAhuRSb4ax
— Aju Varghese (@AjuVarghesee) May 4, 2026
நடிகர் அஜு வர்ஜீஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது அதிர்ஷ்டம் தைரியமான விஜய் சாருக்கு சாதகமாக அமைகிறது என்பதற்கு வரலாற்று உதாரணம் என்று தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன மோலிவுட் பிரபலங்கள்:
Massive congrats to @actorvijay anna on this remarkable victory in Tamil Nadu.
The people have placed their trust in your vision, and I’m sure you will lead with pride and purpose. 🤝✨ #TamilnaduAssemblyElection2026 #TVKVijay @TVKVijayHQ @Jagadishbliss
— Nivin Pauly (@NivinOfficial) May 5, 2026
தமிழ்நாட்டில் ஈட்டிய இந்தச் சிறப்பான வெற்றிக்கு, விஜய் அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மக்கள் உங்கள் தொலைநோக்குப் பார்வையின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; நீங்கள் பெருமையுடனும் உறுதியுடனும் வழிநடத்துவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று நடிகர் நிவின் பாலி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.