ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை ரத்து செய்த அமேசான்… பேச்சுவார்த்தை நடத்தும் பிரபல நிறுவனம்
Jana Nayagan Movie Ott Rights Update: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த படம் ஜன நாயகன். இந்தப் படம் தொடர்ந்து திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் ஓடிடி அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் தளபதி விஜய் படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு தற்போது தீவிர அரசியலில் களமிறங்கி உள்ளார். அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி தற்போது தமிழகத்தில் 2026-ம் ஆண்டிற்கன சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். இதன் காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஜய் தெரிவித்தார். இது அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழக மக்களிடையே சோகமான விசயமாக இருந்தாலும் இறுதியாக நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படத்திற்காக ஆவளுடன் காத்திருந்தனர். இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து சென்சார் பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் படம் முழுவதுமாக இணையத்தில் கசிந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி இருக்கும் நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை பெற்று இருந்த அமேசான் நிறுவனமும் அதனை ரத்து செய்தது. தொடர்ந்து பிரச்சனைகள் மட்டுமே சந்தித்து வரும் ஜன நாயகன் படம் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கின்றனர்.




ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை எந்த நிறுவனம் பெற உள்ளது:
முன்னதாக அமேசான் ப்ரைம் வீடியோ ஜன நாயகன் படக்குழுவினர் உடன் போட்ட ஓடிடி ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து எந்த ஓடிடியில் ஜன நாயகன் படம் வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வியில் இருந்தனர். இந்த நிலையில் தற்போது ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமை குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி படத்தின் ஓடிடி உரிமைக்காக ஜீ 5 நிறுவனும் படக்குழுவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் ஜன நாயகன் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஜீ 5 ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
JanaNayagan – Amazon Prime Cancel#JanaNayagan – Zee Talks https://t.co/a4lHPyNLXN
— Movie Tamil (@_MovieTamil) May 2, 2026
Also Read… RJ Balaji: கருப்பு படத்தில் வாட்டர்மெலான் காட்சி வைக்க காரணம் அதுதான் – ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!