AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கர முதல் ராஜா சிவாஜி வரை… பான் இந்திய மொழிகளில் இந்த வாரம் எந்த படத்தை தியேட்டரில் பார்ப்பீங்க?

This Week Theatre Release: தமிழ் சினிமா மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் வாரம் வாரம் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

கர முதல் ராஜா சிவாஜி வரை… பான் இந்திய மொழிகளில் இந்த வாரம் எந்த படத்தை தியேட்டரில் பார்ப்பீங்க?
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Apr 2026 19:11 PM IST

கர படம்: பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படங்களில் நடித்து வருகின்றார். இது மட்டும் இன்றி அவ்வபோது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் கர. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி உள்ளார். மேலும் இன்று ஏப்ரல் மாதம் 30-ம் தேதி 2026-ம் ஆண்டு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் பாசிட்டிவான விமர்சனத்தை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பேட்ரியாட் படம்: மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி. இவர்கள் இருவரும் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக இணைந்து நடித்து உள்ள படம் பேட்ரியாட். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இயக்குநர் மகேஷ் நாராயணன் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் நாளை மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஜெட்லீ படம்: தெலுங்கு சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யா. இவர் நாயகனாக தற்போது நடித்து உள்ள படம் ஜெட்லீ. இந்தப் படத்தை இயக்குநர் ரித்தேஷ் ராணா எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சத்யா உடன் இணைந்து நடிகர்கள் ரியா சிங்க, வெண்ணெலா கிஷோர், அஜய் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read… 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து உச்சத்தில் நீடிப்பது ஒரு நம்பமுடியாத சாதனை – த்ரிஷா குறித்து புகழ்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி

ஏக் தீன்: இந்தி சினிமாவில் இயக்குநர் சுனில் பாண்டே எழுதி இயக்கி உள்ள படம் தான் ஏக் தீன். ஜுனைத் கான் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி  நாயகியாக நடித்து உள்ளார். இது நடிகை சாய் பல்லவி இந்தி சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நாளை மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ராஜா சிவாஜி: இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக். இவர் தற்போது இயக்கி நாயகனாக நடித்து உள்ள படம் ராஜா சிவாஜி. இந்தப் படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், வித்யா பாலன், ஜெனிலியா தேஷ்முக், மகேஷ் மஞ்சரேக்கர், ஃபர்தீன் கான், பாக்யஸ்ரீ, சச்சின் கெடேகர், அமோல் குப்தே, போமன் இரானி, ஜிதேந்திர ஜோஷி, சித்தார்த் ஜாதவ், சுரேஷ் விஸ்வகர்மா, கபில் ஹொன்ராவ், சித்தார்த் ஷிண்டே, சல்மான் கான் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read… ரசிகர்களே தயாரா? ஸ்பாட்டிற்கு சென்று ஆய்வு செய்யும் அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!

Follow Us