AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கீர்த்தி சுரேஷின் புதுப் படத்தின் டைட்டில் இதுதான்… வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Sathyavan Savithiri Movie First Look Poster Out Now: நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது வைரலாகி வருகின்றது.

கீர்த்தி சுரேஷின் புதுப் படத்தின் டைட்டில் இதுதான்… வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
கீர்த்தி சுரேஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Apr 2026 12:44 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். இவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் தனுஷ், சூர்யா, விஜய் ஆகியோருக்கு ஜோடியாக படங்களை நடித்த இவர் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து இருப்பார். இவர்களின் அண்ணன் தங்கை பாசமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவரது நடிப்பில் இறுதியாக ரிவால்வர் ரீட்டா என்ற படம் தமிழில் வெளியானது. இந்தப் படமும் நாயகியை மையமாக வைத்து வெளியானது குறிப்பிடத்தக்கது. டார்க் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி என இரண்டிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சத்யவான் சாவித்திரியாக நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்:

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து உள்ள படத்திற்கு சத்யவான் சாவித்திரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். கோர்ட் ரூம் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடிகர்கள் மிஷ்கின், சாருகேஷ், ஷில்பா மஞ்சுநாத் மற்றும் பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Also Read… நாளை திரையரங்குகளில் வெளியாகும் கர படம்… வைரலாகும் மேக்கிங் வீடியோ!

சத்யவான் சாவித்திரி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சீரடி சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் விஜய் – வைரலாகும் வீடியோ

Follow Us