ஹேசா… ருத்ரசா… 9 ஆண்டுகளைக் கடந்தது பிரபாஸின் பாகுபலி 2 படம்!
9 Years Of Baahubali 2 Movie: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற பாகுபலி 2 படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பாகுபலி 2. ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை தமன்னா பாட்டியா நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடித்து இருந்த நிலையில் அப்பா பிரபாஸிற்கு அனுஷ்கா ஷெட்டி நாயகியாக நடித்து இருந்த நிலையில் மகன் பிரபாஸிற்கு தமன்னா பாட்டியா ஜோடியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர், சுப்பராஜு, ப்ருத்வி ராஜ், ரோகினி மொலேட்டி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் திரையரங்குகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இருந்தது என்றும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீராவாணி இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




9 ஆண்டுகளைக் கடந்தது பிரபாஸின் பாகுபலி 2 படம்:
முதல் பாகத்தில் நடிகர் பிரபாஸை அவரது விஸ்வாசியான சத்யராஜ் கொலை செய்துவிடுகிறார். அவர் ஏன் அப்படி செய்தார் என்பதை விவரிக்கும் விதமாகவே இந்த பாகுபலி 2 படம் அமைந்தது. இந்தப் படங்களின் இரண்டு பாகங்களையும் இணைத்து பாகுபதில் தி எபிக் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டனர். அந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் பாகுபலி 2 படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்ததைப் படக்குழு கொண்டாடி வருகின்றது.
Also Read… மகுடம் படம் குறித்து நடிகர் விஷால் கொடுத்த அப்டேட் – வைரலாகும் பதிவு
பாகுபலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Heysaa….Rudhrassa…🔥
The sound that still echoes in our ears. 9 years for #Baahubali2 ❤️🔥#Baahubali #9YearsForBaahubali2 pic.twitter.com/4luyaX1d5W
— Baahubali (@BaahubaliMovie) April 28, 2026
Also Read… Sai Pallavi: இந்தியாவிலே சிறந்த நடிகை சாய் பல்லவி.. ஏக் தின் படத்தை பார்த்து கண்கலங்கிய அமீர்கான்!