மகுடம் படம் குறித்து நடிகர் விஷால் கொடுத்த அப்டேட் – வைரலாகும் பதிவு
Vishals Magudan Movie Update : நடிகர் விஷால் தற்போது இயக்கி நாயகனாக நடித்து வரும் படம் மகுடம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்து நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பிரபல தயாரிப்பாளரின் மகனாக ரசிகர்களிடையே அறிமுகம் ஆன நடிகர் விஷால் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாகவே தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான செல்லமே என்ற படத்தின் மூலம் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் விஷால். இவர் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் மக்களிடையே புரட்சித் தளபதி என்ற பட்டத்தையும் பெற்றார். மேலும் சினிமாவில் ஆக்ஷன், ரொமாண்டிக் மற்றும் காமெடி என அனைத்தையும் நன்றாக செய்து முடித்தார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் நடிகர் விஷால்.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகும் பலப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக சமீப காலமாக நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வெற்றியைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஷால் தற்போது இயக்கி நாயகனாக நடித்து வரும் படம் மகுடம். இந்தப் படம் குறித்து விஷால் வெளியிட்ட அறிவிப்பு தற்போது வைரலாகி வருகின்றது.




காக்கிநாடாவில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு திரும்பியது மகுடம் படக்குழு:
அதன்படி விஷால் வெளியிட்ட பதிவில் கூறியதாவது, காக்கிநாடாவில் இரண்டு வாரக் கடுமையான படப்பிடிப்புக்குப் பிறகு, ‘மகுடம்’ படக்குழு சென்னைக்குத் திரும்பியுள்ளது. எனது அன்பான படக்குழுவினருக்கு, குறிப்பாக ஒளிப்பதிவாளர் அபிநந்தன், பிருந்தா மாஸ்டர் மற்றும் எனது இயக்கக் குழுவினருக்கு நன்றி. படம் முழுவதும் எனக்காக உறுதுணையாக இருந்த பிரபாவுக்கும், எனது முழு படக்குழுவினருக்கும், குறிப்பாக அகந்தையோ பகட்டோ இல்லாத தொழில்முறை அணுகுமுறை கொண்ட என் அன்பு அஞ்சலிக்கும், என் சிறந்த நண்பன் ஜான் விஜய், ஜேபி சார் மற்றும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அமைதியாகத் தங்கள் வேலையைச் செய்த அனைத்துப் பெண்களுக்கும், நான் உடல் முழுவதும் நோய்வாய்ப்பட்டிருந்தபோதும் மனம் தளராமல் இந்தப் பயணத்தைக் கடந்து செல்ல எனக்கு உறுதுணையாக இருந்த என் அன்புத் துணை சாய் தன்சிகாவுக்கும் என் பாராட்டுகள். சுப்பிரமணியம் அண்ணே. நன்றி. படத்தில் மிகவும் கடினமான 90-களின் பகுதியை நாங்கள் முடித்துவிட்டோம். நாளை முதல் சென்னையில் எங்களின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். எங்களின் முதல் சிங்கிளுடன் ஜி.வி-யின் மேஜிக் விரைவில் அரங்கேறும். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
Also Read… Rathna Kumar: அந்த படத்திற்காக முதலில் சாய் பல்லவியைதான் அணுகினேன் – இயக்குநர் ரத்னகுமார்!
இணையத்தில் வைரலாகும் விஷாலின் எக்ஸ் தள பதிவு:
After a gruelling two week schedule in Kakinada #MAGUDAM/#MAKUTAM team is bak in Chennai. Thanks to my lovely crew, especially my DOP Abhinandan, Brinda master and my direction team, kudos to u Prabha, for holding fort for me all through and my entire cast especially darling… pic.twitter.com/0XCoV1pssP
— Vishal (@VishalKOfficial) April 27, 2026
Also Read… Dhanush: கோவை வந்த தனுஷ்.. வேலுடன் வரவேற்ற ரசிகர்கள் – வீடியோ இதோ!