Sai Pallavi: இந்தியாவிலே சிறந்த நடிகை சாய் பல்லவி.. ஏக் தின் படத்தை பார்த்து கண்கலங்கிய அமீர்கான்!
Aamir Khan Praised Sai Pallavi: நடிகை சாய் பல்லவி பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ள புதிய படம்தான் ஏக் தின். இதில் அமீர்கான் தயாரிக்க, அவரின் மகன் ஜுனைத் கான் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் பிரீமியர் கடைசி நேற்று (26/04/2026) ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. அதை பார்த்து கண்கலங்கிய அமீர்கான், சாய் பல்லவியை பாராட்டியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் லீட் நாயகியாக நடித்துவந்தவர் சாய் பல்லவி (Sai Pallavi). இவர் மலையாள சினிமாவின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகியிருந்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களில் நடித்துவந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக அமரன் (Amaran) என்ற படமானது கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்திருந்தது. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் படங்களில் நடித்துவந்தார். அந்த வகையில் இவருக்கு இந்தியில், ஏக் தின் (EK Din) (ஒரு நாள்) படத்தில்நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. நடிகர் அமீர்கானின் (Aamir Khan) தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் சுனில் பாண்டே (Sunil Pandey) இயக்கிவந்தார். இந்த படமானது வித்தியாசமான காதல் கதையில் தயாராகியுள்ளது. இதில் அமீர்கான் மகன் ஜுனைத் கான் (Junaid Khan) ஹீரோவாக நடிக்க, சாய் பல்லவி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படமானது வரும் 2026 மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் பிரீமியர் காட்சிகள், நேற்று 2026 ஏப்ரல் 26ம் தேதியில் நடைபெற்றிருந்தது. அந்த பிரீமியர் காட்சியில், ஏக் தின் படத்தை பார்க்கும்போதே, நடிகர் அமீர்கான் கண்கலங்கியிருந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், நடிகை சாய் பல்லவியை பாராட்டியுள்ளார்.




இதையும் படிங்க: அவருடைய கண்களே பல விஷயங்களை சொல்லும் – சூர்யா குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
சாய் பல்லவியை பாராட்டி பேசிய நடிகர் அமீர்கான் :
ஏக் தின் பட நிகழ்ச்சியின்போது பேசிய நடிகர் அமீர்கான், “இன்று நமது இந்தியாவில் சிறந்த நடிகை சாய் பல்லவிதான்” என அதில் அவர் கூறியிருந்தார். அந்த வகையில் மேடையில் இருந் சாய் பல்லவி, பெரும் அதிர்ச்சியுடன் அவரின் புகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தார். இவ்வாறு இந்தியாவிலே சிறந்த நடிகர்களில் ஒருவரான, நடிகர் அமீர்கான் நடிகை சாய் பல்லவிக்கு இப்படியொரு பாராட்டை தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் சாய் பல்லவியின் மேல் மேலும் மதிப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: இன்று முடிவடையுமா ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை? வைரலாகும் தகவல்
ஏக் தின் படத்தை பார்த்து கண்கலங்கிய அமீர்கான் தொடர்பான வீடியோ:
సాయి పల్లవి దేశంలోనే బెస్ట్ యాక్ట్రెస్
– #AamirKhan #SaiPallavi #EkDin pic.twitter.com/5eKWQ4tO3J
— Sai Satish (@PROSaiSatish) April 27, 2026
நடிகை சாய் பல்லவி தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்களை நடித்துவந்த நிலையில், அவர் ஹிந்தியில் அறிமுகமாகும் முதல் படம்தான் ஏக் தின். இப்படத்தில் ஜூனை கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சுவாரஸ்யமான காதல் கதையில் இப்படம் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 மே 1ம் தேதியில், தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.
இதையடுத்து சாய் பல்லவி இந்தியில் ராமாயணா என்ற படத்திலும் சீதையாக நடித்துள்ளார். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. மேலும் ஆதம்பாக்கம் 2லும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் தனுஷிற்கு ஜோடியாக டி55 என்ற படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.