AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று முடிவடையுமா ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை? வைரலாகும் தகவல்

Jana Nayagan Movie Censor Update | தமிழ் சினிமாவில் தற்போது பெரிய பிரச்சனையாக வலம் வருபவது ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை தான். இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

இன்று முடிவடையுமா ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை? வைரலாகும் தகவல்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Apr 2026 14:34 PM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவும் தற்போது எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தினை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் வெளியீடு ஜனவரி மாதமே அறிவிக்கப்பட்டு இருந்தது. படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு படத்திற்கு சென்சார் சான்றிதல் கிடைக்காத காரணத்தால் படம் வெளியீட்டை தள்ளி வைப்பதாக படக்குழு அறிவித்தது. இந்த தகவல் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனையே தொடர்ந்து இழுபறியாக இருந்தது. இப்படி இருக்கும் சூழலில் நடிகர் தளபதி விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் அது ஒரு பக்கம் சென்றுகொண்டு இருந்தது.

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் தளபதி விஜயின் ஜன நாயகன் படம் முழுவதுமாக நேரடியாக இணையத்தில் வெளியானது அனைவரையும் அதிர்சியில் ஆழ்த்தியது. மேலும் அந்தப் படத்தை இணையத்தில் வெளியிட்டது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி சிலரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் சென்சார் தொடர்பான அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இன்று முடிவடையுமா ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை?

தணிக்கைக் குழுவின் புதிய மறுஆய்வைத் தொடர்ந்து, இத்திரைப்படத்திற்கான தணிக்கைச் சான்றிதழை வழங்குவது குறித்த தனது முடிவை தணிக்கை வாரியம் இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது. படக்குழுவினருக்குச் சான்றிதழ் கிடைக்குமேயானால், மே 7 அல்லது மே 27 ஆகிய தேதிகளில் பக்ரீத் பண்டிகையையொட்டி இப்படம் வெளியாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம். இப்படம் இணையத்தில் கசிந்திருந்தபோதிலும், திரையரங்க வசூலில் (Box Office) இப்படம் பிரம்மாண்டமானதொரு தொடக்கத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Rathna Kumar: அந்த படத்திற்காக முதலில் சாய் பல்லவியைதான் அணுகினேன் – இயக்குநர் ரத்னகுமார்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Dhanush: கோவை வந்த தனுஷ்.. வேலுடன் வரவேற்ற ரசிகர்கள் – வீடியோ இதோ!

Follow Us