EK Din: சாய் பல்லவியின் இந்தி அறிமுகம்… ‘ஏக் தின்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது? வெளியான அறிவிப்பு இதோ!
Sai Pallavi Hindi Debut Movie: தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக கலக்கிவந்தவர் சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துவந்த நிலையில், தற்போது இந்தியிலும் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவரின் இந்தி முதல் படம்தான் ஏக் தின். இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் மலையாள சினிமாவின் மூலமாக படத்தின் கதாநாயகியாக அறிமுகமானாலும், இவர் தமிழில் ரவி மோகனின் (Ravi Mohan) “தாம் தூம்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தே சினிமாவில் தனது நடிப்பினை தொடங்கினர். அந்த விதத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான பிரேமம் (Premam) என்ற மலையாள படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய சினிமாவையே ஆட்சி செய்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக அமரன் (Amaran) என்ற படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்திருந்தது. இந்த நிலையில், இவர் தற்போது இந்தி சினிமாவிலும் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
அப்படி இவர் அறிமுகமாகியுள்ள முதல் இந்தி படம்தான் ஏக் தின் (Ek Din). இந்த படத்தில் ஆமீர்கானின் (Aamir Khan) மகன், ஜுனைத் கான் (Junaid Khan) கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது அதன்படி “ஏக் தின்” படமானது 2026 மே 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: தனுஷின் 54 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியானது சூப்பர் அப்டேட்
சாய் பல்லவியின் ஏக் தின் திரைப்படத்தின் ரிலிஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :
In the chaos of life, love will find you… Ek Din❤️#SaiPallavi #JunaidKhan
Directed by: Sunil Pandey
Written by: Sneha Desai, Spandan Mishra
Produced by: Mansoor Khan, Aamir Khan, Aparna Purohit
Music: Ram Sampath
Lyrics: Irshad Kamil
Co-Producer: B. Srinivas Rao
Associate… pic.twitter.com/xNCfzYbHF4— Aamir Khan Productions (@AKPPL_Official) January 15, 2026
ஏக் தின் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது :
இந்த ஏக் தின் படத்தை இயக்குநர் சுனில் பாண்டே இயக்க, ஆமீர்கானின் தயாரிப்பு நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் நடிகர் ஜுனைத் கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் இப்படத்துக்கு இந்தி இசையமைப்பாளர் ராம் சம்பத் இசையமைத்துவருகிறார். இந்த படமானது முழுவதுமாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளதாம்.
இதையும் படிங்க: கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்… வைரலாகும் போஸ்ட்
வித்தியாசமான காதல் கதையில் இப்படம் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 மே 1ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் கிட்டத்தட்ட 4 மாதங்கள் இருக்கும் நிலையில், இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் 2026 ஜனவரி 16ம் தேதியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.