பண்டிகையை கொண்டாடுங்க… நாளை வெளியாகிறது தனுஷ் 54 படத்தின் முக்கிய அப்டேட்
Dhanush 54 Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தனுஷ் 54. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை நாளை பொங்கப் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் மூன்று படங்கள் வெளியானது. இந்த மூன்று படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது அடுத்தடுத்தப் படங்களில் ஒப்பந்தம் ஆகி நடிக்கத் தொடங்கினார். அதன்படி தனுஷ் அடுத்தடுத்து தனது 54, 55, 56 மற்றும் 57-வது படங்களுக்காக எந்த எந்த இயக்குநருடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என்று தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் தனுஷ் தனது 54-வது படத்திற்காக விக்னேஷ் ராஜா, 55-வது படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமி, 56-வது படத்திற்காக இயக்குநர் மாரி செல்வராஜ், மற்றும் 57-வது படத்திற்காக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து ஆகியோருடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
அதன்படி நடிகர் தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜா உடன் இணைந்து பணியாற்றிய தனுஷ் 54 படத்தின் பணிகள் முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படம் இந்த 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுகின்றது.




நாளை வெளியாகிறது தனுஷ் 54 படத்தின் முக்கிய அப்டேட்:
பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் நாளை பொங்கள் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Also Read… எல்லா பிரச்னையும் ஓவர்… தொடங்கியது வா வாத்தியார் படத்தின் டிக்கெட் புக்கிங் – வைரலாகும் அப்டேட்
தனுஷ் 54 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Get ready, D celebration begins 🔥#D54Update tomorrow at 10.50 AM 💥
Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical 🥁@dhanushkraja @VelsFilmIntl @velsmusicintl @kushmithaganesh @ThinkStudiosInd @alfredprakash17 @thenieswar @ksravikumardir… pic.twitter.com/uJAE22Zn5Q— Vels Film International (@VelsFilmIntl) January 14, 2026
Also Read… Jana Nayagan: பொங்கலன்று உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகன் பட விசாரணை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!