Sreeleela: அதை யாராலும் என்னிடமிருந்து பறிக்க முடியாது – எமோஷனலாக பேசிய ஸ்ரீலீலா!
Sreeleela About Dance Passion: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ஸ்ரீலீலா. இவரின் நடிப்பில் சமீபத்தில் பராசக்தி படம் வெளியான நிலையில், தமிழ் மக்களிடையே ஓரளவு கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றும் பேசிய நடிகை ஸ்ரீலீலா, தனது நடனம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
கன்னடம் சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்து. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ஸ்ரீலீலா (Sreeleela). இவரின் நடிப்பில் தமிழில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த பராசக்தி படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha kongara) இயக்க, நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthykeyan) கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படமானது இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் உருவாகியிருந்த நிலையில், கடந்த 2026 ஜனவரி 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இதில் நடிகர்கள் அதர்வா (Athrvaa), ரவி மோகன், ராணா, பேசில் ஜோசப் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியான முதல் நாளையே சுமார் ரூ 27 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது.
மேலும் இப்படத்திற்கு திரையரங்குகளில் மக்களிடையே வரவேற்புகள் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ப்ரோமோஷன் போது நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்ரீலீலா, அதில் தனக்கு நடனம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபுவின் படம் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
நடனம் குறித்து எமோஷனலாக பேசிய நடிகை ஸ்ரீலீலா:
அந்த நேர்காணலில் பேசிய நடிகை ஸ்ரீலீலா, அதில் “நான் எனது படங்களுக்காக தேவைப்பட்டால் அதற்காக நடனமாடுவேன். நான் நடனத்தின் மூலமாக என்னிடம் உள்ள வித்தியாசமான விஷயங்களை தெரிந்துகொள்ளமுடியும். நான் நடிக்கும் படங்களுக்கு எண்ணம் முடிந்தவரை எனது உழைப்பை கொடுப்பேன். நடனம் என்பது எனக்கு ஒரு எமோஷனல். நான் சந்தோஷமான நாட்களில் நடனமாடுவேன், மற்றையோருக்காகவும் அல்ல எனக்காக நான் நடனமாடுவேன்.
இதையும் படிங்க: பொங்கலுக்கு ஜன நாயகன் வெளியாகாதது வருத்தமளிக்கிறது – நடிகர் ஜீவா
அதே நான் மிகவும் சோகமாக இருந்தால், எனக்கு பிடித்த பாடலை கேட்டுக்கொண்டு மிகவும் தனிமையாகவே இருப்பேன். நடன உணர்வு என்பது எனக்குள் இருக்கிறது. என்னிடம் இருந்து அதை யாராலும் பறிக்கமுடியாது. ஆனால் சினிமாவில் எனது படங்களுக்காக எனது முழு உழைப்பையும் கொடுக்கவேண்டும் என நினைப்பேன்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகை ஸ்ரீலீலா தமிழில் பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள நிலையில், மேலும் அஜித் குமாரின் AK64 படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த் படத்தின் ஷூட்டிங் வரும் 2026 பிப்ரவரி மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், இதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்ற நிலையில், வரும் 2026 பிப்ரவரி மாதத்தின் 2வது வாரத்தில் படக்குழு வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.