Sreeleela: நான் முழு மனதோடு ஆதரிப்பேன் – ஜன நாயகன் படம் குறித்து பேசிய ஸ்ரீலீலா!
Sreeleela About Jana Nayagan: பான் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவர் தற்போது பராசக்தி என்ற படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், ஜன நாயகன் படம் பற்றிய தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) தென்னிந்திய சினிமாவில் தொடர் திரைப்படங்களை கொடுத்துவருகிறார். இவரின் நடிப்பில் தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளிலும் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர் இந்தியிலும் முக்கிய படத்தில் கார்த்திக் ஆரியனுக்கு (karthik Aryan) ஜோடியாக நடித்துவருகிறார். இவ்வாறு தென்னிந்தியா மற்றும் பாலிவுட் சினிமாவிலும் பிரபலமான நடிகையாக ஸ்ரீலீலா இருந்துவருகிறார். அந்த விதத்தில் இவருக்கு தமிழில் முதல் அறிமுக திரைப்படமாக அமைந்துள்ளதுதான் பராசக்தி (Parasakthi). இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.
இப்படம் 2026 ஜனவரி 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாகவே நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்ரீலீலா, அதில் ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படம் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.




இதையும் படிங்க: ரேஸ்-னா ரொம்ப பிடிக்கும்… நான் அவரின் மிகப்பெரிய ரசிகை- உற்சாகமாக பேசிய ஸ்ரீலீலா!
ஜன நாயகன் திரைப்படம் குறித்து பேசிய ஸ்ரீலீலா :
அந்த நேர்காணலில் தொகுப்பாளர் அவரிடம், பகவந்த் கேசரி படத்தின் ரிமேக்தான் ஜன நாயகன் படம் எது பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். உடனே பேசிய ஸ்ரீலீலா, “எனக்கு அது குறித்து எந்த சிந்தனையும் இல்லை. மேலும் பகவந்த் கேசரி திரைப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம் மற்றும் சிறந்த கதையும் கூட. அதை ஜன நாயகன் படம் மூலம் மீண்டும் சொல்வது மிகவும் நல்லதுதான். அந்த படம் மிகவும் நல்ல படம்.
இதையும் படிங்க: தனுஷின் D 56 படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்? வைரலாகும் தகவல்
நான் எப்போதும் அதை முழு மனதுடன் ஆதரிப்பேன். மேலும் நானும் ஒரு விஜய் சாரின் ரசிகைதான். இது அவரின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கான மிகவும் எமோஷ்னலான படம். மேலும் இந்த 2026ம் ஆண்டு பொங்கல் படங்கள் ரிலிஸ் குறித்து சிவகார்த்திகேயன் சாரும் ஏற்கனவே சொல்லிருக்காரு. அதனால் முதலில் அண்ணன் வருகிறார், பின் தம்பி வருகிறார்” என அவர் அதில் வெளிப்படையாக பேசியிருந்தார்.
ஜன நாயகன் திரைப்படம் குறித்து நடிகை ஸ்ரீலீலா பேசிய வீடியோ பதிவு :
#Sreeleela about #JanaNayagan
– I have no idea, but #BhagavanthKesari was such a close film to me ❤️🎬.
– It’s a beautiful story, and if it’s being told again, that’s great—I’ll always support it with all my heart 💖#Parasakthi #SivaKartikeyanpic.twitter.com/eFW3A0CojY— Movie Tamil (@_MovieTamil) January 6, 2026
ஸ்ரீலீலாவின் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ராணா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் அமைந்துள்ளது. அந்த வகையில் இப்படத்திற்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.