Jana Nayagan: ஜன நாயகன் பட சென்சார் பிரச்சனை.. வழக்கை நாளைக்கு ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்!
Jana Nayagan Censor Issue: தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய். இவரின் கடைசி படமான ஜன நாயகன் திரைப்படம் வரும் 2026 ஜனவரி 9ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு சென்சார் பிரச்சனையானது தொடர்ந்துவரும் நிலையில், இந்த வழக்கை நாளை (2026 ஜனவரி 7ம் தேதி) வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கோலிவுட் சினிமாவை ஒரு தூணாக தாங்கிவருபவர்தான் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவர் சினிமாவில் சுமார் 33 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் நடித்து பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார், அந்த வகையில் இவர் இறுதியாக ஜன நாயகன் (Jana Nayagan) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம்தான் இவரின் கடைசி படம் என கூறப்படும் நிலையில், வரும் 2026 ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்டாத நெருங்கிய நிலையில், இன்னும் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் (Censor certificate) கிடைக்கவில்லை. இதன் காரணமாக படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தை (Madras High Court ) அணுகிய நிலையில், இதன் விசாரணையும் இன்று 2026 ஜனவரி 6ம் தேதியில் நடைபெற்றுள்ளது. இப்படத்திற்கான சென்சார் சான்றிதழ் உடனடியாக வழங்கவேண்டும் என படக்குழு தரப்பில் வழக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளை 2026ம் ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தை போல மெர்சல் படத்திற்கும் சென்சார் சான்றிதழ் பிரச்சனை வந்திருந்த நிலையில், படத்தின் ரிலீசிற்கு ஒரு நாளுக்கு முன்புதான் வழங்கப்பட்டிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.




இதையும் படிங்க: பராசக்தி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நல்ல பெண்ணால் ரொம்ப பாதுகாப்பாக உணர்ந்தேன் – சுதா கொங்கரா குறித்து பாராட்டி பேசிய ரவி மோகன்
தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட சென்சார் வழக்கு குறித்து வைரலாகும் பதிவு :
#Jananayagan – A complaint was received claiming that certain scenes in the film hurt religious sentiments.. Because of this, the Censor Board said the film was sent to the Revising Committee.. The court has now ordered that the complaint be officially filed.. pic.twitter.com/IGc60FxXGL
— Laxmi Kanth (@iammoviebuff007) January 6, 2026
இந்த வழக்கில் சென்சார் குழு, ஜன நாயகன் திரைப்படத்தில் மதத்தை புண்படுத்தும் விதத்தில் காட்சிகள் பல உள்ளதாக கூறுவதாக படக்குழு இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. மேலும் இந்த வழக்கு முதல் விசாரணை இன்று நடைபெற்றிருந்த நிலையில், நாளை 2026 ஜனவரி 7ம் தேதியில் நிச்சயமாக விசாரிக்கப்படும் என நீதிபதி உறுதியளித்துள்ளார்.
சென்சார் பிரச்சனையிலும் தமிழகத்தில் தொடங்கிய ஜன நாயகன் பட டிக்கெட் முன்பதிவு:
இந்த ஜன நாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு சில பெரிய திரையரங்குகளில் மட்டும் முதல் நாள் முதல் ஷோவுக்கான டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று 2026 ஜனவரி 6ம் தேதி முதல் தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் முதல்நாள் முதல் ஷோவிற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: சிலம்பரசனுக்கு ரொம்பவும் பிடித்த நடிகைகள் இவர்கள்தான் – வெங்கட் பிரபு உடைத்த உண்மை!
இன்னும் படத்தின் சென்சார் பிரச்சனை போர்டு முடிவிற்கு வராத நிலையிலும், டிக்கெட் முன்பதிவு தொடங்கி அனைத்து திரையரங்குகளிலும் முழுவதுமாக அனைத்து டிக்கெட்டுகளை புக் செய்யப்பட்டுள்ளது. சென்சார் பிரச்சனை தொடர்ந்தபோது, தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகள் போன்ற இடங்களிலும் இப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் வெறித்தனமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.