Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் கொண்டாடும் சிறை படத்தின் கதை என்ன? 

Sirai Movie Story: தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மட்டும் இன்றி தொடர்ந்து பிரபலங்களிடையே தொடர்ந்து நல்ல விமர்சனத்தைப் பெற்று வரும் படம் சிறை. உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியாகி உள்ள இந்தப் படத்தின் கதை என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் கொண்டாடும் சிறை படத்தின் கதை என்ன? 
சிறை Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jan 2026 20:57 PM IST

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் விக்ரம் பிரபு. மக்களுக்கு பிடிக்கும் கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து விக்ரம் பிரபு நடித்து வருவதால் அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீப காலமாக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் பிரபு முன்னணி வேடத்தில் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் சிறை. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி இருந்தார். இது இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இயக்குநர் தமிழ் கதை எழுதியுள்ளார். உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து உருவான இந்த சிறை படம் கடந்த 25-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

தொடர்ந்து திரையரங்குகளில் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று வரும் இந்தப் படத்தை பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். மேலும் டாணாக்காரன் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு போலீஸாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது போல இந்த சிறை படத்தில் போலீஸாக சிறப்பாக நடித்துள்ளார். அனைவரும் கொண்டாடும் இந்தப் படத்தின் கதை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சிறை படத்தின் கதை என்ன?

நடிகர் விக்ரம் பிரபு சிறை படத்தில் கான்ஸ்டேபிலாக பணியாற்றி வருகிறார். படத்தின் தொடக்கத்திலேயே கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்தும் செல்லும் போது கைதியின் ஆட்கள் தாக்குதல் நடத்தி தப்பிக்க முயற்சிக்கின்றனர். அப்போது அந்த கைதியை சுட்டு கொலை செய்துவிடுகிறார் விக்ரம் பிரபு. இதற்காக இவர் மீதும் உடன் இருந்த மற்ற போஸார் மீது விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றது.

Also Read… Rishabh Shetty: ஜன நாயகன் ட்ரெய்லர் ஃபயர்… பராசக்தி ட்ரெய்லர் அற்புதம் – பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

அனைவரிடமும் நன்றாக பழகக்கூடிய விக்ரம் பிரபுவிற்கு அவரது டிபார்ட்மெண்டில் அவருக்கு கீழே வேலை செய்யும் பல ரசிகர்களாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் உடன் இருப்பவர் தனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை அதனால் விடுப்பு கேட்ட உயர் அதிகாரி தர மறுக்கிறார். இந்த சூழலில் அந்த வேலையை தான் செய்வதாக கூறி செல்கிறார். அப்படி அவர் சென்ற இடத்தில் அப்துல் ரவூப் என்ற கொலை குற்றவாளியை சிறையில் இருந்து விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துச் செல்கிறார்.

அப்படி செல்லும் வழியில் அந்த கொலை குற்றவாளியான அப்துல் ரவூப் வாழ்க்கையும் அவரின் காதலையும் தெரிந்துகொண்டு அவருக்கு உதவ நினைக்கிறார் விக்ரம் பிரபு. இறுதியில் அந்த கொலை குற்றவாளியான அப்துல் ரவூப் வெளியே வந்தாரா தனது காதலியுடன் சேர்ந்தாரா என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… அமேசான் ப்ரைம் வீடியோவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது பகவந்த் கேசரி