அப்படியொரு அசாத்தியமான படைப்பு.. விக்ரம் பிரபுவின் சிறை படத்தைப் பாராட்டிய மாரி செல்வராஜ்!
Mari Selvaraj praises Sirai Movie: இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமவில் வித்தியாசமான கதைகளை கொடுத்துவருகிறார். அந்த வகையில் வளர்ந்துவரும் இளம் இயக்குநர்களின் நல்ல படங்களையும் பார்த்து பாராட்டிவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிறை படத்தை பார்த்த அவர், அந்த படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டில் வெளியான “பரியேறும் பெருமாள்” (Pariyerum Perumal) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj). தனது முதல் படத்தின் மூலமாகவே சமூக கட்டமைப்பை வெளிப்படுத்திருந்தார். இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பை கொடுக்க, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் வித்தியாசமான கருத்துக்களை கொடுத்துவந்தார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் மொத்தமாக இதுவரை 5 படங்கள் வெளியாகியுள்ளது. அகில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் பைசன் (Bison). இந்த படமானது கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த படமானது மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.
அந்த வகையில் இந்த படத்தை அடுத்ததாக மாரி செல்வராஜ், தனுஷுடன் (Dhanush) கைகோர்க்கவுள்ள டி56 (D56) படத்திற்காக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் விக்ரம் பிரபுவின் (Vikram Prabhu)நடிப்பில் வெளியான சிறை (Sirai) படத்தை பார்த்துள்ளார். அது குறித்து எக்ஸ் பக்கத்தில் பாத்தி பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: பராசக்தி படத்திலிருந்து இன்று மாலை வெளியாகிறது ‘வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ வீடியோ
சிறை திரைப்படத்தை பாராட்டி மாரி செல்வராஜ் சொன்ன விஷயம் :
அந்த பதிவில் அவர், “சிறை படத்தை பார்த்ததாகவும், இந்தத் மாதிரியான கதை அனைவருக்கும் ஒரு மாற்றத்தை உருவாக்கும், அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும். அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை படம் உள்ளது.
இதையும் படிங்க: 2025ல் தோல்வி படங்களை கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்கள்.. அட இவர்களும் இந்த லிஸ்டில் உண்டா?
இப்படத்தில் நடித்ததற்கு விக்ரம் பிரபுவையும், கதை எழுதிய இயக்குனர் தமிழ் மற்றும் அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரியையும் அந்த பதிவில் பாராட்டியுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகபரவிவருகிறது.
சிறை படத்தை பாராட்டி மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையையும் துணிச்சலையும் கொடுக்கும்.… pic.twitter.com/Km6vQgCyG8
— Mari Selvaraj (@mari_selvaraj) December 28, 2025
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் கூட்டணியில் வெளியான படம்தான் சிறை. அதிரடி ஆக்ஷன் மற்றும் எதிர்பாராத எமோஷனல் கதைக்களத்தில் வெளியான இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தின் கதையை இயக்குநர் தமிழ் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது கடந்த 2025ம் டிசம்பர் 25ம் தேதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.