அனிருத், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ குறித்து விஜய் சொன்ன சுவாரஸ்ய விசயம்… என்ன தெரியுமா?
Thalapathy Vijay Speech : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் படக்குழுவினர் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் தற்போது மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இந்த ஜன நாயகன் படம் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் வேறு எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறியது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் படத்திர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன் தயாரிக்க்கின்றது. இந்த நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று 27-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு மலேசியாவில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்க்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் விஜய் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.




அனிருத், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ குறித்து விஜய் சொன்ன விசயம்:
இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியபோது நடிகை பூஜா ஹெடே குறித்து சொன்னது என்ன என்றால், அவர் தமிழ் நாட்டின் மோனிகா பெல்லூச்சி என்று அவர் கூலி படத்தில் ஆடிய பாடலை குறிப்பிட்டு கூறினார். தொடர்ந்து நடிகை மமிதா பைஜூ தமிழ் சினிமா மக்களின் மகளாக மாறுவார் என்று தெரிவித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் குறித்து பேசியபோது அவருக்கு தான் வைத்துள்ள பெயர் குறித்து கூறினார். அது என்ன என்றால், நான் அனிருத்துக்கு ஒரு புதிய பெயரைச் சூட்டுகிறேன் – எம்.டி.எஸ். இதை யார் வேண்டுமானாலும் யூகிக்கலாம். இசைத் துறை ஒரு கடை போன்றது. “மியூசிக்கல் டிபார்ட்மென்டல் ஸ்டோர்”. அனிருத் ஒரு கடை. நீங்கள் கதவைத் திறந்து உள்ளே சென்றால், எண்ணற்ற பாடல்களையும் பின்னணி இசையையும் எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… பராசக்தி படத்தில் அந்த பிரபல ஹீரோதான் நடிக்க வேண்டியது… இயக்குநர் சுதா கொங்கரா ஓபன் டாக்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
— #ThalapathyVijay
About the #JanaNayagan Audio Launch 🎤🔥— A short story about positivity 🌈
A small help, a small good deed—
one day in the future, it will come back to help you.
Don’t cause pain or trouble to anyone. 🤍— #MamithaBaiju :
Not just young people, #dude—
from…— Movie Tamil (@_MovieTamil) December 27, 2025