பராசக்தி படத்தில் அந்த பிரபல ஹீரோதான் நடிக்க வேண்டியது… இயக்குநர் சுதா கொங்கரா ஓபன் டாக்
Parasakthi Movie Update: தமிழ் சினிமாவில் தொடர்ந்து பரப்பை ஏற்படுத்தி வருவது பராசக்தி மற்றும் ஜன நாயகன் பட அப்டேட். இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் சுதா கொங்கரா அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஒட்டுமொத்த தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் அதிக அளவில் பேசப்படும் இரண்டு படங்கள் என்றால் அது ஜன நாயகன் மற்றும் பராசக்தி. இந்த இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகயை முன்னிட்டு 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் பராசக்தி படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள நிலையில் படம் 60களில் நடைப்பெறுவது போல எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முதலில் ஒரு ரொமாண்டிக் கதையைதான் கூறியதாவௌம் அது அவருக்கு பிடித்து இருந்தது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஒருசில வரிகளை பராசக்தி படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா நடிகர் சிவகார்த்திகேயனிடம் விளக்கியுள்ளார். அந்த ரொமாண்டிக் கதையைவிட இந்த பராசக்தி படத்தின் கதை நடிகர் சிவகார்த்டிகேயனுக்கு பிடித்துப்போக இந்தப் படத்தை நடிப்பதில் உருதியாக இருந்தார் என்று இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்து இருந்தார்.
பராசக்தி படத்தில் அந்த பிரபல ஹீரோதான் நடிக்க வேண்டியது:
இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் சுதா கொங்கரா பேசியபோது, பரமசக்தி திரைப்படத்தை சூர்யா தான் செய்யவிருந்தார், கோவிட் காலத்தின்போது நான் அவரிடம் கதை சொன்னேன். சூர்யாவும் அந்தப் படத்தின் மீது மிகுந்த ஆர்வமாக இருந்தார், அந்த நேரத்தில் நாங்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டோம். அந்தப் படம் கைவிடப்பட்டதற்கான முக்கியக் காரணம், தொடர்ச்சியாகப் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சூர்யாவுக்கு நேரம் இல்லாததுதான் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஜிவி பிரகாஷின் இம்மார்ட்டல் படத்தின் டீசரை வெளியிட்ட ரவி மோகன் – வைரலாகும் வீடியோ
இணையத்தில் கவனம் பெறும் சுதா கொங்கராவின் பேச்சு:
“#Parasakthi was supposed to do by #Suriya, I have narrated during Covid time🤝. Suriya was also excited for the film & we did many reasearch at the time🔍. The major problem for dropping is Suriya didn’t had time for a continuous shoot🎬”
– #Sudhakongarapic.twitter.com/fQPtUVmP2q— AmuthaBharathi (@CinemaWithAB) December 25, 2025
Also Read… ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியானது தாய் கிழவி படத்தின் டீசர்



