பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் இப்படிதான் இணைந்தார்… இயக்குநர் சுதா கொங்கரா விளக்கம்
Parasakthi Movie Director Interview: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் எப்படி நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் சென்சேசனலை ஏற்படுத்தி வரும் செய்தி பராசக்தி படத்தின் செய்தி. அதனபடி இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியிலேயே முன்னதாக பல மாற்றங்கள் ஏற்பட்டது. அதனபடி இயக்குநர் சுதா கொங்கரா எழுதி, இயக்கிய படம் பராசக்தி. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை ஸ்ரீ லீலா நாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரவி மோகன் வில்லன் கதாப்பாத்தில் நடித்துள்ளார். வேறு நாயகன் படத்தில் முதன்முறையாக நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளது இந்த பராசக்தி படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வா நடிகர் சிவகார்த்திகேயனின் தம்பியாக நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பேசில் ஜோசஃப், ராணா டகுபதி, குரு சோமசுந்தரம் மற்றும் பிரித்வி ராஜன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையைத்து உள்ளார். படம் வருகின்ற 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் இப்படிதான் இணைந்தார்:
இந்த நிலையி இயக்குநர் சுதா கொங்கரா அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியபோது, புறநானூறு திரைப்படம் தாமதமாகிக் கொண்டிருந்தபோது, எஸ்.கே.யின் நண்பர் அருண் விஸ்வா வந்து என்னைச் சந்தித்தார். எஸ்.கே-வுக்காக என்னிடம் ஏதேனும் கதை இருக்கிறதா என்று அவர் கேட்டார். அப்போது நான் எஸ்.கே-விடம் ஒரு காதல் கதையைக் கூறினேன், அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
பிறகு, நான் சாதாரணமாக அவரிடம் ‘பராசக்தி’ கதையை பத்து வரிகளில் சொன்னேன். அதன்பிறகு, அவர் திரைக்கதையைக் கூடக் கேட்காமல், நான் இந்தப் படத்தை செய்கிறேன். நீங்கள் எங்கு கையெழுத்துப் போடச் சொன்னாலும் போடுகிறேன். நான் உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறேன். டிசம்பர் 2024 முதல் என் தேதிகள் காலியாக உள்ளன என்று கூறினார். சொன்னபடியே அவர் செய்தார். அந்தப் படமும் தற்போது முடிவடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Also Read… ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியானது மைசா படத்தின் கிளிம்ஸ் வீடியோ!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#SudhaKongara about #SivaKartikeyan coming On board 🌟:
• When Purananooru was getting delayed, SK’s Friend Arun Vishwa came and Met me.. He asked if I had any story for SK.. Then i narrated a love story to SK and he liked it so much..🤝
• Then I casually told him the story… pic.twitter.com/iQzCA69sRY
— Laxmi Kanth (@iammoviebuff007) December 25, 2025
Also Read… சண்டை இல்லாம இருக்கவே மாட்டாங்க போல… பிக்பாஸில் அமித் மற்றும் வினோத் இடையே வெடித்த சண்டை