Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கானா வினோத்தை காணவந்த அவரின் குடும்பம்.. கண்ணீருடன் கதறிய வினோத் – வைரலாகும் புரோமோ!

Bigg Boss Season 9 Tamil: கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி முதல் தமிழ் மக்களிடையே அதிகம் விமர்சிக்கப்பட்டுவரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியானது கடந்த 11 வாரகாலமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இன்று (2025 டிசம்பர் 23ம் தேதி) வெளியான முதல் புரோமோ ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துவருகிறது.

கானா வினோத்தை காணவந்த அவரின் குடும்பம்.. கண்ணீருடன் கதறிய வினோத் – வைரலாகும் புரோமோ!
பிக் பாஸ் சீசன் 9
Barath Murugan
Barath Murugan | Published: 23 Dec 2025 11:28 AM IST

தமிழ் மக்களிடையே ரசிக்கப்பட்டுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 (Bigg Boss Season 9). இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை நடிகர் மக்கள்செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வருகிறார். இவர் கடந்த சீசன் 8 முதல் தொகுத்து வழங்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மொத்தம் 20 போட்டியாளர்களுடன் கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சியானது கோலாகலமாக தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியின் 3வது வாரத்தில் வால்ட் கார்ட் எண்டரியாக திவ்யா, பிராஜின், சாண்ட்ரா மற்றும் அமீத் என மொத்தம் 4 போட்டியாளர்கள் நுழைந்திருந்தனர். தற்போது இந்த சீசன் 9 தமிழ் ஒளிபரப்பாக தொடங்கி 11 வாரத்தை கடந்துள்ளது. அந்த வகையில் கடந்த வாரத்தில் டபுள் ஏவிக்ஷனில் FJ மற்றும் ஆதிரை (Adthirai) வெளியேறினார். மேலும் தற்போது இந்த நிகழ்ச்சியில் மொத்தமாகவே 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

மேலும் இந்த வாரத்தில் ஏவிக்ஷன் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வாரத்தில் போட்டியாளர்கள் தங்களின் குடும்பங்களை சந்திக்கும் வாரமாக அமைந்துள்ளது. எந்த சீசனிலும் இல்லாதது போல, இந்த சீசனில் குடும்பத்தை பார்க்கவேண்டும் என்றால் ஒரு டாஸ்கை சீக்கிரமாக முடிக்கவேண்டும் என கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று 2025 டிசம்பர் 23ம் தேதியில் கானா வினோத்தின் (Gana Vinoth) குடும்பம் வந்துள்ளது.

இதையும் படிங்க: நான் ரொம்பவே எமோஷனலான நபர்தான்.. எனக்கும் அது நிச்சயம் இருக்கும்- சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்!

பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியில் 79வது நாளின் முதல் புரோமோ வீடியோ :

இன்று வெளியான முதல் புரோமோவில் கானா வினோத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் அவரை சந்திக்க வந்துள்ளதை காட்டியுள்ளனர். அந்த விதத்தில் வினோத்திற்கு டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த டாஸ்கை கண்ணீருடன் முடித்துவிட்டு, ஆனந்தமாய் குசுடும்பத்தை சந்தித்துள்ளார்.

இதையும் படிங்க: 2025-ம் ஆண்டில் தமிழ் ரசிகர்களிடையே அதிக கவனம் ஈர்த்த நாயகிகள் யார் யார்? லிஸ்ட் இதோ

இதில் அவரின் மனைவி அவரிடம் கோபத்தை குறைக்கும் படியாக பேசியிருந்தார். இது தொடர்பான புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் அடுத்ததாக பார்வதியின் அம்மா மற்றும் அண்ணன் உள்ளே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த 12வது வாரம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது