2025-ம் ஆண்டில் தமிழ் ரசிகர்களிடையே அதிக கவனம் ஈர்த்த நாயகிகள் யார் யார்? லிஸ்ட் இதோ
Most Famouse Actress In Tamil Cinema 2025: இந்த 2025-ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ள நிலையில் சினிமாவில் நடந்த நிகழ்வுகளை நாம் தொடர்ந்து பின்னோக்கி பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே கவணத்தை ஈர்த்த நடிகைகள் யார் யார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
நடிகை த்ரிஷா: தமிழ் சினிமாவில் இந்த 2025-ம் ஆண்டில் அடுத்தடுத்தடுத்து மூன்று படங்கள் நடிகை த்ரிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி பிப்ரவரி மாதம் நடிகை த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி படத்திலும் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா க்ரிஷ்ணன் நடித்து இருந்தது. தொடர்ந்து இரண்டு படங்களுக்கு அஜித் உடன் நடிகை த்ரிஷா ஜோடி சேர்ந்தது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா மூன்றாவதாக நடித்தப் படம் தக் லைஃப். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தொடர்ந்து இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்த நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை பூஜா ஹெக்டே: தமிழ் சினிமாவில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. நடிகர் சூர்யா நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழில் நடிகர் விஜய் உடன் இணைந்து ஜன நாயகன் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்த செய்தி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகை பூஜா ஹெக்டே ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்த நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை கயடு லோஹர்: கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி பிரபலமானவர் நடிகை கயடு லோஹர். இவர் தமிழ் சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ட்ராகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு மூன்று நாயகிகள் இந்தப் படத்தில் நடித்து இருந்தார். அதில் நடிகை கயடு லோஹரும் ஒருவர். மூன்று நாயகிகள் இருந்தாலும் அதில் கயடு லோஹரின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்தப் படங்களில் நடிக்க நடிகை கயடு லோஹர் கமிட்டாகி வருகிறார். மேலும் 2025-ம் ஆண்டில் திக கவனத்தை ஈர்த்த நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




ஸ்ரீ லீலா: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ரீ லீலா. இவர் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு உட்பட மற்ற மொழிகளில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து தமிழில் தற்போது நாயகியாக அறிமுகம் ஆகிறார் நடிகை ஸ்ரீ லீலா. இது தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகும் பராசக்தி படம் வரும் 2026-ம் ஆண்டில் தான் வெளியாகிறது என்றாலும் இவர் தொடர்பான செய்திகள் ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றது.