India vs Namibia: நமீபியா எதிராக இஷான் கிஷன் நங்கூர பேட்டிங்.. 209 ரன்கள் குவித்த இந்திய அணி!
IND vs NAM T20 World Cup: இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்ட்யாவின் அரைசதங்களுக்குப் பிறகு இந்திய அணி இமாலய இலக்கை எட்டும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும், நமீபியா அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் பீல்டர்கள் செயல்பட்டதன் காரணமாக, இந்திய அணி கடைசி 11 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்தது.
2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்துள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையில் இதுவரை இந்திய அணி (Indian Cricket Team) எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இருப்பினும், டெத் ஓவர்களில் நமீபிய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியதை தொடர்ந்து இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் தடுமாறினர். உண்மையில், கடைசி 4 ஓவர்களில் இந்திய அணி 30 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்திய அணி சார்பில் இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான அரைசதங்களை பதிவு செய்தனர்.
இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்ட்யாவின் அரைசதங்களுக்குப் பிறகு இந்திய அணி இமாலய இலக்கை எட்டும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும், நமீபியா அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் பீல்டர்கள் செயல்பட்டதன் காரணமாக, இந்திய அணி கடைசி 11 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்தநிலையில், நமீபியா அணிக்கு 210 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




ALSO READ: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தோல்வி.. சூப்பர் 8க்கு செல்லுமா இங்கிலாந்து..? புள்ளிகள் அட்டவணை இதோ!
அதிரடியாக பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி:
Innings Break!
On the back of a powerful batting show, #TeamIndia set a target of 2⃣1⃣0⃣ 🎯
Over to our bowlers 👉
Scorecard ▶️ https://t.co/SQLoaZjq98#T20WorldCup | #MenInBlue | #INDvNAM pic.twitter.com/uDOZ70cUvP
— BCCI (@BCCI) February 12, 2026
நமீபியா அணிக்கு எதிராக தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் வெறும் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். இருப்பினும், ஒரு தவறான ஷாட்டால் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். மறுமுனையில் மெதுவான தொடக்கத்தை கொடுத்த இஷான் கிஷன் 20 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டியது மட்டுமின்றி 61 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக இந்திய அணி பவர்பிளேயில் 86 ரன்களும், 7 ஓவர்கள் முடிவதற்குள் 100 ரன்களைக் கடந்தது. இதன்பிறகு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார், திலக் வர்மா 25 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் அவுட்டான பிறகு உள்ளே வந்த ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ALSO READ: அதிக வயதில் அரைசதம்.. டி20 உலகக் கோப்பையில் உலக சாதனை படைத்த ஓமன் வீரர்!
11 பந்துகளில் 5 விக்கெட்டுகள்:
ஹார்திக் பாண்ட்யா க்ரீஸில் இருந்த வரை, இந்திய அணி 235-240 ரன்கள் எளிதாக எட்டும் என இந்திய ரசிகர்கள் நினைத்தனர். இருப்பினும், கடைசி 11 பந்துகளில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், இந்த 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறை. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி 200 அல்லது அதற்கு மேல் எடுப்பது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பு, டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 200 ரன்களை பதிவு செய்திருந்தது.