Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Saranya Ponvannan: அஜித் குமார் சார் ரொம்ப குழந்தை மாதிரியான குணம்.. நடிகை சரண்யா பொன்வண்ணன் சொன்ன விஷயம்!

Saranya Ponvannan About Ajith: தமிழில் பிரபல நடிகையாக இருந்து, தற்போது முக்கிய வேடங்களில் நடித்துவருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் தற்போது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துவருகிறார். அந்த வகையில் முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய இவர், அஜித் குமாரின் குணம் குறித்து தெரிவித்துள்ளார்.

Saranya Ponvannan: அஜித் குமார் சார் ரொம்ப குழந்தை மாதிரியான குணம்.. நடிகை சரண்யா பொன்வண்ணன் சொன்ன விஷயம்!
அஜித்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 22 Dec 2025 08:30 AM IST

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகியாக படங்களில் நடித்து வந்தவர் சரண்யா பொன்வண்ணன் (Saranya Ponvannan). இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக மணி ரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியான நாயகன் (Nayakan) படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு (Kamal Haasan) ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்புகளும் இருந்தது. அந்த வகையில் இவர் தற்போது படங்களில் நடிகர்களுக்கு அம்மா வேடத்தில், அக்கா வேடத்திலும் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் வெளியான படங்கள் பல உள்ளது. அதிலும் அம்மாவாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை இவர் ஈர்த்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தில் ஆரம்பத்தில் இவர் நடிக்கும்போது விருப்பமே இல்லாமல் நடித்ததாகவும், இந்த படம்தான் வருக்கு விருதுகள் வாங்கி கொடுத்தது என்றும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது சினிமாவையும் கடந்து, தனக்கு பிடித்த தொழிலான காஸ்டியூம் டிசைனிங்கிலும் நடிகை சரண்யா பொன்வண்ணன் இறங்கியுள்ளார். இவர் தல அஜித் குமாருடன் (Ajith kumar) கிரீடம் (Keeridam)என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இதில் அவருக்கு அம்மா வேடத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய இவர், தல அஜித் குமாரின் குணம் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: உலக புகழ்பெற்ற வைரல் டான்ஸை ஆடிய அஜித் மகன் ஆத்விக்… வைரலாகும் வீடியோ

அஜித் குமாரின் குணம் குறித்து நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்த விஷயம்:

அந்த நிகழ்ச்சியின்போது, நடிகர் அஜித் குமாரின் புகைப்படத்தை காண்பித்து தொகுப்பாளர், அவர் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்க தொடங்கிய நடிகை சரண்யா பொன்வண்ணன், “அஜித் சார், நன்றாக சமைப்பார்,  நன்றாக சாப்பிடுவார். சமையல் குறித்து அவருடன் பேச தொடங்கினால், ரொம்ப நேரம் பேசுவார். குழந்தை மாதிரி, குழந்தை போலவும் மிகவும் அப்பாவி மாதிரி இருப்பார் என அதில் அவர் அஜித் குமார் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க: 2025ல் டிரென்டிங்.. இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படத்தின் ட்ரெய்லர் எது தெரியுமா? முழு விவரங்கள் இதோ!

நடிகை சரண்யா பொன்வண்ணனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை சரண்யா பொன்வண்ண தற்போது சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டு, தனது நீண்டநாள் கனவான காஸ்டியூம் டிசைனிங்கில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக பல மாணவர்களுக்கும் இதை கற்றுக்கொடுத்துவருகிறார். மேலும் சில படங்களில் சிறப்பான வேடத்திலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.