Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Year Ender: 2025ல் ரூ 100 கோடிகள் வசூல் செய்த தமிழ் நடிகர்களின் படங்கள் என்னென்ன.. விவரமாக தெரிஞ்சிக்கோங்க!

2025 Tamil Box Office : தமிழ் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் அறிமுக நடிகர்கள் முதல் முன்னணி நட்சத்திர நாயகர்களின் படங்கள் வரை, 2025ல் ரூ 100 கோடிகள் வசூல் செய்த டாப் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Year Ender: 2025ல் ரூ 100 கோடிகள் வசூல் செய்த தமிழ் நடிகர்களின் படங்கள் என்னென்ன.. விவரமாக தெரிஞ்சிக்கோங்க!
தமிழ் படங்கள் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 18 Dec 2025 22:04 PM IST

ரெட்ரோ திரைப்படம் (Retro) : நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் இந்த 2025ல் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் ரெட்ரோ. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (karthik Subbaraj) இயக்க, சூர்யா தயாரித்திருந்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பின் சூர்யாவிற்கு வெற்றியை கொடுத்த படமாக இது அமைந்திருந்தது. இப்படமானது அதிரடி ஆக்ஷன், காதல் மற்றும் மக்களின் எமோஷனல் சம்மந்தமான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே (Pooja Hegde) சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த 2025 மே மாதத்தில் வெளியான இப்படம் உலகளவில் சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. மேலும் தமிழில் இப்படமானது சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சி திரைப்படம் (Vidaamuyarchi) :

இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில், அஜித் குமார் (Ajith kumar) நடித்திருந்த திரைப்படம்தான் விடாமுயற்சி. இது பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படமானது கிட்டத்தட்ட 2 அன்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுவந்த நிலையில், கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இப்படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான நிலையில், அந்தளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இப்படம் அஜித்திற்கு தோல்வி படமாகவே அமைந்திருந்தது. அந்த வகையில் இப்படம் உலகளாவிய வசூலில் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குபேரா மற்றும் தேரே இஷ்க் மே (Kuberaa – Tere Ishq Mein) :

தனுஷின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் வெளியான படம் குபேரா. இது கடந்த 2025 ஜூலை இறுதியில் வெளியானது. இது தெலுங்கில் வெளியாகி கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. பின் இந்தி இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் தேரே இஷ்க் மே. இப்படம் கடந்த 2025 நவம்பர் மாதத்தில் வெளியான நிலையில், ரூ 150 கோடிகளை கடந்துள்ளது. மேலும் தனுஷின் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான இட்லி கடை படம் ரூ 100 கோடி வசூலை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிராகன் மற்றும் டியூட் திரைப்படம் (Dragon – Dude) :

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் மட்டும் இந்த 2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட 2 படங்கள் வெளியாகியிருந்தது. அதில் முதலில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிராகன். இப்படம் 2025 பிப்ரவரி மாதத்தில் வெளியாகி சுமார் ரூ 100 கோடிகளை வசூலித்தது. பின் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் இவரின் நடிப்பில் வெளியான படம்தான் டியூட். இப்படம் கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் வெளியான நிலையில் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது.

தலைவன் தலைவி (Thalaivan Thalavii) :

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2025ல் வெளியாகி வெற்றிபெற்ற படம்தான் தலைவன் தலைவி. இதில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கணவன் மனைவி இடையே ஏற்படும் விவாகரத்து பிரச்சனை தொடர்பான கதையில் வெளியாகியிருந்தது. இந்த படமானது விஜய் சேதுபத்திற்க்கு இந்த 2025ல் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றிபெற்ற படமாக அமைந்திருந்தது.

மதராஸி திரைப்படம் (Madharaasi):

சிவகார்த்திகேயனின் நடிப்பில் இந்த 2025ல் வெளியான படம் மதராஸி. இதை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்த் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கதை மக்களிடையே வரவேற்கப்படவில்லை. அதன் காரணமாக இப்படம் மொத்தமாகவே சுமார் ரூ 100 கோடிகள் மட்டுமே வசூலித்திருந்தது.