2025-ம் ஆண்டில் கோலிவுட் சினிமாவில் ஹிட் கொடுத்த அறிமுக இயக்குநர்கள் லிஸ்ட்
Best Debutant Directors 2025: தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக அறிமுக இயக்குநர்களாக அறிமுகம் ஆகும் பலரின் படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 2025-ம் ஆண்டு அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் வெற்றிப் பெற்ற படங்களை தற்போது பார்க்கலாம்.
குடும்பஸ்தன்: யூடியூபில் நக்கலைட்ஸ் என்ற சேனல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ராஜேஷ்வர் காளிசாமி. இவரது இயக்கத்தில் யூடியூபில் வெளியான வீடியோக்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ராஜேஷ்வர் காளிசாமி இயகுநராக அறிமுகம் ஆன படம் குடும்பஸ்தன். கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், நிவேதிதா ராஜப்பன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். ஒரு மிடில் க்ளாஸ் இளைஞன் காதல் திருமணம் செய்துக்கொண்ட பிறகு படும் கஷ்டத்தைதான் இந்தப் படம் வெளிப்படையாக காட்டியிருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான பிறகு இயக்குநர் ரசிகர்களிடையே மாபெரும் பாராட்டைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டூரிஸ்ட் ஃபேமிலி: தமிழ் சினிமாவில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இலங்கையில் கடன் தொல்லையால் சிரமப்பட்டு வந்த குடும்பம் கடல் வழியாக தமிழகத்திற்கு பிழைப்பு தேடி வருகின்றனர். இதனை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகி இருந்தது. மிகவும் அழுத்தமான கதையை காமெடி பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் முன்னணி வேடத்தில் நடித்து இருந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான பிறகு இயக்குநர் ரசிகர்களிடையே மாபெரும் பாராட்டைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




டியூட்: இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். இவரது இயக்கத்தில் கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் டியூட். இந்தப் படத்தின் மூலமாக கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டியூட் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
Also Read… தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அனைவரிடம் சண்டையிடும் சாண்ட்ரா… வைரலாகும் வீடியோ