Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆக்‌ஷன் காமெடியில் வெளியான சங்கராந்திகி வாஸ்துனம் படத்தினை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Sankranthiki Vasthunam Movie OTT Update: நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு சினிமாவில் வெளியான படம் சங்கராந்திகி வாஸ்துனம். திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஆக்‌ஷன் காமெடியில் வெளியான சங்கராந்திகி வாஸ்துனம் படத்தினை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
சங்கராந்திகி வாஸ்துனம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Dec 2025 22:05 PM IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 14-ம் தேதி ஜனவரி மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான சங்கராந்திகி வாஸ்துனம். இந்தப் படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் வெங்கடேஷ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி, பி. சாய் குமார், நரேஷ், VTV கணேஷ், சர்வதாமன் டி. பானர்ஜி, உபேந்திரா லிமாயே, ஸ்ரீனிவாஸ் அவசரலா, பீமலா ரேவந்த் பவன் சாய் சுபாஷ், முரளிதர் கவுட், ஸ்ரீகாந்த் ஐயங்கார், வட்லமணி ஸ்ரீநிவாஸ், சீனிவாச ரெட்டி, பப்லு பிரிதிவீராஜ், ராஜிதா, ஆனந்த் ராமராஜு, சிட்டி பாபு, பம்மி சாய், கோபராஜு விஜய், பிரதீப் கப்ரா, மகேஷ் பாலராஜ், நானி சிம்ஹா, அனந்த ஸ்ரீராம், சத்ய பிரகாஷ், அமித் திவாரி, ஆனந்த் ராஜ், பீம்ஸ் சிசிரோலியோ, அனில் ரவிபுடி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் இருவரும் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்த நிலையில் இசையமைப்பாளர் பீம்ஸ் சிசிரோலியோ இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சங்கராந்திகி வாஸ்துனம் படத்தினை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

நடிகர் வெங்கடேஷ் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார். அவருக்கு டிபார்ட்மெண்டில் சரியான மரியாதை இல்லை என்ற காரணத்திற்காக வேலையை விட்டுவிட்டு செல்கிறார். யாரும் இல்லாத அனாதையான அவர் ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்துக்கொண்டு குழந்தைகளைப் பெற்று ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.

Also Read… பிக்பாஸில் திவ்யா மீது கோபத்தில் இருக்கும் சாண்ட்ரா… வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து என்ஆரையாக முதல்வரைப் பார்க்க வந்தவர் எதிரிகளால் கடத்தப்படுகிறார். அவர்களிடம் இருந்து அந்த நபரை காப்பாற்ற காவல்துறை அதிகாரியும் வெங்கடேஷின் முன்னாள் காதலியுமான மீனாட்சி சௌத்ரி உதவி கேட்கிறார். இதனைத் தொடர்ந்து அவர்கள் எப்படி அந்த என்ஆரையை காப்பாற்றினர் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… பராசக்தி ஃபீவர் தொடங்கியது… படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்