பாகிஸ்தானின் பலோசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி எனப்படும் அமைப்பு, ஆசிபா மெங்கல் மற்றும் ஹவா பலோச் என்ற இரண்டு பெண்களை தனது போராட்டத்தின் மைய முகங்களாக முன்னிறுத்தியுள்ளது. இந்த மாற்றம், ஆயுத போராட்டத்தோடு சேர்ந்து ஒரு புதிய அடையாள அரசியலையும் உருவாக்கி வருவதாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகள், இரண்டு நாட்களுக்குள் பலோசிஸ்தான் பகுதியில் 145 போராளிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள நிலையில், இது சமீப ஆண்டுகளில் அந்த மாநிலம் சந்தித்த மிகக் கடுமையான வன்முறை காலகட்டமாகக் கருதப்படுகிறது.