Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக்பாஸில் திவ்யா மீது கோபத்தில் இருக்கும் சாண்ட்ரா… வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் 10 வாரங்கள் முடிவடைந்து தற்போது 11-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளர்களாக வந்த சாண்ட்ரா மற்றும் திவ்யா இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

பிக்பாஸில் திவ்யா மீது கோபத்தில் இருக்கும் சாண்ட்ரா… வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Dec 2025 11:12 AM IST

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 9-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது 10 வாரங்கள் முடிவடைந்து 11-வது வாரத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 11-வது வாரத்திற்கான வீட்டு தல டாஸ்க் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது. அந்த டாஸ்கில் வெற்றிப் பெற்ற கானா வினோத் தற்போது 11-வது வாரத்திற்கான வீட்டு தலயாக பொறுப்பை ஏற்றுள்ளார். மேலும் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்றைய தினம் ஓபன் நாமினேஷனாக நடைப்பெற்றது. அதில், திவ்யா, பார்வதி, கனி திரு, சபரி, சுபிக்‌ஷா, கம்ருதின், ஆதிரை, அரோரா, சாண்ட்ரா, எஃப்ஜே, அமித் பார்கவ் என 11 நபர்கள் இந்த வாரம் பிக்பாஸ் எவிக்‌ஷனுக்கான நாமினேஷனில் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் கடந்த வாரம் டபுள் எவிக்‌ஷனில் ரம்யா ஜோ மற்றும் வியானா இருவரும் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் உள்ளனர். இதில் வீட்டு தலையான கானா வினோத் மற்றும் விக்ரமை தவிற மற்ற 11 போட்டியாளர்களும் நாமினேட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களில் யார் வெறியேறுவார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் திவ்யா மீது கோபத்தில் இருக்கும் சாண்ட்ரா:

இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளர்களாக வந்த சாண்ட்ரா மற்றும் திவ்யா இருவரும் வீட்டிற்குள் வந்த முதலில் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் சாண்ட்ரா நாட்கள் செல்ல செல்ல திவ்யா மீது வெறுப்பாகிறார். அதனைத் தொடர்ந்து திவ்யா என்ன செய்தாலும் அவர் மீது குறைக்கூறிக்கொண்டே அவரிடம் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார். அது மட்டும் இன்றி தொடர்ந்து வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் சாண்ட்ரா திவ்யா குறித்து புரணி பேசிக்கொண்டு இருக்கும் வீடியோ தொடர்ந்து வெளியாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைப்பெற்ற ஓபன் நாமினேஷன் – வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தியேட்டரில் வெற்றிநடைபோடும் களம் காவல் படம்… எவ்வளவு வசூலித்தது தெரியுமா?