Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விமல் நடிப்பில் வடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சசிகுமார்

Vadam Movie First Look Poster: நடிகர் விமல் நடிப்பில் தற்போது உருவாக உள்ள படம் வடம். இந்தப் படம் குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விமல் நடிப்பில் வடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சசிகுமார்
வடம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Dec 2025 13:48 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை தொடர்ந்து பலப் படங்களில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகர் விமல். அதன்படி நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் படங்களான கில்லி, கிரீடம், குருவி ஆகியப் படங்களில் அவர்களின் நண்பர்களாக கூட்டத்தில் ஒருவராக நடித்து வந்த நடிகர் விமல் கடந்த 2009-ம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் விமல். இவரது நடிப்பில் வெளியான முதல் படமே இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலமாக நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விமல் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான தூங்கா நகரம், வாகை சூடவா, மாட்டுத்தாவணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மஞ்சப்பை, மாப்ள சிங்கம், மன்னர் வகையரா, தெய்வ மச்சான், போகுமிடம் வெகு தூரமில்லை, பரமசிவன் ஃபாத்திமா ஆகியப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து நடிகர் விமல் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மகாசேனா. இந்தப் படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனத்தைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விமல் நடிப்பில் வெளியானது வடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:

இந்த நிலையில் நடிகர் விமல் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் வடம். இயக்குநர் கேத்திரன் எழுதி இயக்கி வரும் இந்த வடம் படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது நடிகரும் இயக்குநருமான சசிகுமார் அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல் ஹாசன்… நெகிழ்ந்த ரஜினிகாந்த்

நடிகர் சசிகுமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Anirudh: படம் வரும்போது இன்னும் பயங்கரமா இருக்கும்.. அரசன் படம் குறித்து கருது தெரிவித்த அனிருத்!