Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Karthi: கைதி 2 படம் கைவிடப்பட்டதா? கார்த்தியின் பதிலால் கலங்கிய ரசிகர்கள்!

Karthi About Kaithi 2 Movie: பிரபல இயக்குநராக இருந்துவருபவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் தமிழில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் இவருக்கு முதல் வெற்றியை கொடுத்தும் கைதி படம். இந்த படத்தின் பாகம் 2 உருவாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் கார்த்தி பேசிய விஷயத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Karthi: கைதி 2 படம் கைவிடப்பட்டதா? கார்த்தியின் பதிலால் கலங்கிய ரசிகர்கள்!
கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Dec 2025 19:49 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மிகவும் பிரபலமான நாயகனாக வலம்வருபவர் கார்த்தி (Karthi). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரை நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஹிட் 3 (HIT 3). இந்த படத்தில் நானி (Nani) கதாநாயகனாக நடிக்க, கார்த்தி கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். இப்படம்தான் இவரின் நடிப்பில் 2025ம் ஆண்டில் வெளியான முதல் படம். இந்த படம் கடந்த 2025 மே 1ம் தேதியில் நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் ஒன்றாக வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்தாக கார்த்தியின் நடிப்பில் வா வாத்தியார் (Vaa Vaathiyaar) மற்றும் சர்தார் 2 (Sardar 2) போன்ற பிரம்மாண்ட படங்கள் உருவாகிவந்தது. இதில் வா வாத்தியார் படமானது இந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தயாரிப்பாளர் கடன் பிரச்சனையின் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் கார்த்தி, கைதி 2 (Kaithi 2) திரைப்படம் குறித்து ஷாக் விஷயம் ஒன்றை தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா? சோகத்தில் கார்த்தி ரசிகர்கள்!

கைஇ 2 திரைப்படம் குறித்து நடிகர் கார்த்தி சொன்ன விஷயம் :

தெலுங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கார்த்தியிடம், செய்தியாளர் ஒருவர் கைதி 2 படம் குறித்து அப்டேட் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த கார்த்தி, “எனக்கு கைதி 2 படத்தய் பற்றி எதுவும் தெரியாது. அது குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கைதி 2 திரைப்படம் வராதா என ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது ஹீரோவாக டிசி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தை அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்குவதாக லோகேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கார்த்தி ஊரும் பதில்களை பார்த்தால், கைதி 2 படமானது கைவிடப்பட்டதுபோல தெரிகிறது.

இதையும் படிங்க: வசூலில் பட்டையை கிளப்பும் தேரே இஸ்க் மெய்ன் படம்… கொண்டாட்டத்தில் படக்குழு

கைதி 2 படம் குறித்து கார்த்தி பேசிய வீடியோ பதிவு :

மேலும் லோகேஷ் கனகராஜ், தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் படங்களை இயக்குவதற்கு ஆர்வம் காட்டிவருவதாகவும். அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் மற்றும் இந்தியில் ஆமிர்கானை வைத்து புதிய படத்திற்காக இவர் திட்டம்போட்டுவருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.