ஜெயிலர் 2 படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் – அனிருத்
Jailer 2 Movie Update: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயிலர் 2 படத்தின் பாடல்கள் குறித்து அப்டேட் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் பான் இந்திய அளவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழில் பல முன்னணி நடிகர்களின் ஆதர்சன இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். குறிப்பாக நடிகர் சூப்பர் ஸ்டார் படங்களுக்கு பேட்ட படத்தில் இருந்து தொடர்ந்து தற்போது வரை நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார். ரஜினிகாந்தின் உறவினராக அனிருத் ரவிச்சந்தர் இருந்தாலும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்பதால் அவருக்கான பாடல்களில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு பாடல்களை இசையமைத்து வருகிறார். இதன் காரணமாகவே இவர்களின் கூட்டணியில் வெளியான படங்களின் பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் அடுத்ததாக இவர்களின் கூட்டணியில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவில் படத்தில் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் இருவருமே இருந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
ஜெயிலர் 2 படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்:
அதன்படி இசையமைப்பாளர் அனிருத் அளித்தப் பேட்டியில் பேசியதாவது, ‘கூலி’ ஆல்பம் நம்பர் 1 ஆல்பமாகவும் பாடலாகவும் மாறியுள்ளது. கடந்த ஆண்டு ‘ஜெயிலர்’ நம்பர் 1 இடத்தைப் பிடித்தது, அதேபோல் அடுத்த ஆண்டும் ‘ஜெயிலர் 2’ அந்த இடத்தைப் பிடிக்கும் என்று நம்புகிறோம். ‘ஜெயிலர் 2’ பாடல்கள் முடிவடைந்துவிட்டன, அவை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று அனிருத் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
Also Read… நீலாம்பரியாக நடிக்க வைக்க முதலில் அந்த நடிகையிடமே பேசினோம் – நடிகர் ரஜினிகந்த் ஓபன் டாக்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
“#Coolie album has become No.1 Album & song📈. Previous year #Jailer became No.1 & hopefully Next year #Jailer2 will claim the position🎯. Jailer2 songs are completed & fans are definitely gonna like it❤️🔥”
– #Anirudh pic.twitter.com/bM6O9k8DPj— AmuthaBharathi (@CinemaWithAB) December 10, 2025
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் அரசன் படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் போட்டோ



