திரைப்பட விழாவில் ரஜினியின் பாட்ஷா படம்… உற்சாகத்தில் ரசிகர்கள்
Chennai International Film Festival : நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் அவரது திரை வாழ்க்கையை ரசிகர்களும் பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இதனைக் கொண்டாடும் விதமாக சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகராக அறிமுகம் ஆகி 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இவரது திரையுலக வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். மேலும் தற்போது சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவில் பாட்ஷா படத்தை திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தப் படம் இந்த பாட்ஷா படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை மீண்டும் திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் காத்திருக்கின்றனர். மேலும் இந்தப் படத்துடன் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மேலும் 11 தமிழ் படங்களை திரையில்ட விழா குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி 12-ம் தேதி ஜனவரி மாதம் 1995-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பாட்ஷா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 30 ஆண்டுகளைக் கடந்துள்ள இந்தப் படம் கேங்ஸ்டர் ஆக்ஷன் படமாக வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், தேவன், சசி குமார், விஜயகுமார், ஆனந்தராஜ், சரண் ராஜ், கிட்டி, சேது விநாயகம், சத்தியப்ரியா, செண்பகா, யுவராணி, அல்போன்சா, ஹேமலதா, தளபதி தினேஷ், மகாநதி சங்கர், கிருஷ்ணன், தாமு, நர்சிங் யாதவ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
Also Read… மீண்டும் தள்ளிப்போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம்? வைரலாகும் தகவல்




திரைப்பட விழாவில் ரஜினியின் பாட்ஷா படம்:
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இசையமைப்பாளர் தேவா இசையில் வெளியான பாடல்கள் தற்போது வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் வரும் ஆட்டோகாரன் பாடல் தற்போது வரை ஆட்டோ ஓட்டுநர்கள் ஆந்தமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் பேசும் பஞ்ச் வசனங்கள் ரசிகரக்ளிடையே தற்போது வரை மாபெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… பூஜையுடன் தொடங்கியது சிலம்பரசனின் அரசன் பட ஷூட்டிங்… வைரலாகும் வீடியோ