Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பைசன் காளமாடன் படத்தை வெகுவாகப் பாராட்டிய பிரகாஷ் ராஜ் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

Bison Kaalamaadan Movie: தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதனைப் பார்த்த நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

பைசன் காளமாடன் படத்தை வெகுவாகப் பாராட்டிய பிரகாஷ் ராஜ் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?
பைசன் காளமாடன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Dec 2025 19:39 PM IST

கன்னட சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் கன்னட சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்திய மொழிகளில் பல நூறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவரின் வெர்சடைல் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் வியந்து பார்த்தது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தில் மொரட்டு வில்லனாக நடித்துவிட்டு அதற்கு அடுத்தப் படமே மிகவும் சிறந்த அப்பாவாகவும் அனைவரும் நல்லது நினைக்கு ஒரு நபராகவும் நடித்து ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்துபவராக இருந்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் வில்லனாக நடித்தப் படங்களை ரசிகர்கள் தற்போதும் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் ரீ ரிலீஸான கில்லி படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்து இருப்பார்.

இந்தப் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜின் நடிப்பை தற்போதும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். தொடர்ந்து சினிமாவில் வில்லனாக நடித்துவரும் நடிகர் பிரகாஷ் ராஜ் சமூகத்தில் மக்களுகு எதிராக நடைபெறும் நிகழ்வுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான பைசன் காளமாடன் படத்தினை ஓடிடியில் பார்த்துள்ளார். அந்தப் படத்தை பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு நன்றி:

பைசன் காலமாடன் இறுதியாக அதை நெட்ஃபிளிக்ஸில் பார்த்தேன். எங்கள் கதைகளைச் சொல்ல உங்கள் கலையைப் பயன்படுத்தியதற்கு பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு நன்றி. உங்கள் இருவரையும் ஆழமாகப் பாதித்த வலியை என்னால் பார்க்க முடிகிறது. உங்கள் உண்மைக்கும் உரையாடல்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கும் மேலும் பலம் என்று அந்தப் பதிவில் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

Also Read… லோகேஷ் கனகராஜ் உடனான கூட்டணி குறித்து பேசிய அமீர் கான்

பிரகாஷ் ராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு மற்றும் ஜனநாயகன் படங்களின் சாட்டிலைட் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்