ஈராக் அருகே அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் தற்கொலை படகு தாக்குதல் நடத்தியதில் ஒரு இந்தியர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான Safesea Vishnu என்ற கப்பல், Khor Al Zubair Port அருகே ஈராக் கடல் எல்லைக்குள் சென்றபோது இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கப்பல் மார்ஷல் தீவுகள் கொடி ஏந்தியதாகும்.