Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

லோகேஷ் கனகராஜ் உடனான கூட்டணி குறித்து பேசிய அமீர் கான்

Actor Amir Khan: பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமீர் கான். இவரது நடிப்பில் இந்தி சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் அமீர் கான் அளித்தப் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

லோகேஷ் கனகராஜ் உடனான கூட்டணி குறித்து பேசிய அமீர் கான்
அமீர் கான், லோகேஷ் கனகராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Dec 2025 16:30 PM IST

இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமீர் கான். இவரது நடிப்பில் இந்தி சினிமாவில் வெளியாகும் படங்கள் இந்தி சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய சினிமா ரசிகர்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் நடிகர் கமல் ஹாசன் எப்படி ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களாலும் கொண்டாடப்படுகிறாரோ அப்படிதான் இந்தி சினிமாவில் நடிகர் அமீர் கானை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஒரு படத்தில் நடிப்பதற்காக அவர் எடுக்கும் மெனக்கெடல்கள் ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். மேலும் இந்திய சினிமாவில் உள்ள பல நடிகர்களுக்கு ரோல் மாடலாக நடிகர் அமீர் கான் இருக்கிறார் என்றால் மிகையாகாது. ஒவ்வொரு படத்தின் கதைக்காகவும் அமீர் கான் எவ்வளவு மெனக்கெடுவார் என்பது பலரும் அறிந்த விசயம்.

இப்படி இருக்கும் சூழலில் அவரது நடிப்பில் வெளியான படங்கள் பல வசூலிலும் சாதனைப் படைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழில் இறுதியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் அமீர் கான். இவர் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியான போதே ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். மேலும் படத்தில் நடிகர் அமீர் கானின் காட்சிகள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அமீர் கான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் இதுகுறித்து அமீர் கான் பேசியது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

லோகேஷ் கனகராஜ் உடனான கூட்டணி குறித்து பேசிய அமீர் கான்:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அமீர் கான் அளித்தப் பேட்டியில் லோகேஷ் கனகராஜ் உடனான கூட்டணி குறித்து கேள்வி எழுபப்பட்டது. அதுகுறித்து பேசிய அமீர் கான், லோகேஷ் கனகராஜும் நானும் கடந்த மாதம் மும்பையில் சந்திக்கவிருந்தோம். கதை நடந்து கொண்டிருக்கிறது. ஆம், இந்த திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வருடத்திற்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கமும் உணர்ச்சியும், என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… கலீஃபா படத்தில் மோகன்லாலின் கேரக்டர் இதுதான்… வெளியானது போஸ்டர்

இணையத்தில் கவனம் பெறும் நடிகர் அமீர்கான் பேச்சு:

Also Read… ஜாலியாக ஒரு டிடெக்டிவ் படம் பார்க்கனுமா? இந்த தி பெட் டிடெக்டிவ் படத்தை ஓடிடியில் பாருங்கள்